மகர ராசியில் இணையும் சந்திரன் மற்றும் செவ்வாயால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இனி இந்த மூன்று ராசிகளுக்கு பொற்காலம் தான்!!
ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி வருகின்றன. அப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து வலிமையான ராஜயோகங்களையும் உண்டாக்குகின்றன. கிரகங்களின் இயக்கங்களும், இணைப்புகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது மகர ராசியி
ஜோதிடத்தில் கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி வருகின்றன. அப்போது மற்ற கிரகங்களுடன் இணைந்து வலிமையான ராஜயோகங்களையும் உண்டாக்குகின்றன. கிரகங்களின் இயக்கங்களும், இணைப்புகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உண்டாகிறது. கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் ஒரு முறை உண்டாகும் இந்த ராஜயோகம் ஆனது, மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் சில ராசிக்காரர்கள் மட்டும் அனைத்திலும் வெற்றி பெற போகிறார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
மேஷ ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் கர்ம வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த மகாலட்சுமி ராஜயோகமானது, தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த திருப்பங்களை கொண்டு வருகிறது. படித்து முடித்து பணி இல்லாமல் காத்திருக்கும் நபர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் படைப்பாற்றலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் மன அமைதி மேம்படும், நிம்மதியான இரவு உறக்கமும் கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகள் வழி வருமானம் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் அதிர்ஷ்ட வீட்டில் மாற்றத்தை கொண்டு வரும் இந்த மகாலட்சுமி ராஜயோகம், ரிஷப ராசி கொண்டவர்களின் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகளை போக்கி, வெற்றிகளை கொண்டு வருகிறார். பயண்கள் பல மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மன அமைதியை உறுதி செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். பொருளாதார நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணலாம். உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பினையும் பெறுவார்கள். எதிர்பார்த்த பணியில் அமரும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசி கொண்டவர்களின் ஜாதகத்தில் லக்ன வீட்டில் மாற்றத்தை கொண்ட வரும் இந்த மகாலட்சுமி ராஜயோகம் ஆனது, மகர ராசி கொண்டவர்களின் வாழ்க்கையில் மங்களகரமான மாற்றத்தை கொண்டு வரும். தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான ஒரு காலத்தை அனுபவிக்கும் ஒரு காலமாக இது இருக்கும். திருமணம் முடிக்காத இளையவர்களின் திருமண காரியங்களும் கைகூடும். நண்பர்கள் வழி ஆதரவும் கிடைக்கும். தொழில் துறை மாற்றத்தை விரும்பும் நபர்கள், தங்கள் பணியை மாற்ற விரும்பும் நபர்களுக்கும் சாதகமான ஒரு காலத்தை கொண்ட வரும். உங்கள் விருப்பமான வாகனத்தை வாங்கலாம்.
இதனையும் படியுங்கள் : கும்பத்தில் சூரிய பகவான் 2026