பெயர்ச்சியாகும் செவ்வாயால் இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மா
ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் தற்போது மிதுன ராசியில் உள்ளார். ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி ஜூன் 7 வரை தொடரும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். இது ஏப்ரல் மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்த இடப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பெரிய வாழ்க்கை மாற்றங்களை தரும். இவர்களது வாழ்வில் பொற்காலம் தொடங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் காணலாம்.
மகரம்
செவ்வாயின் தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், உறவுகளில் மகிழ்ச்சியையும் தரும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் உடல்நலத்தில் கவனம் தேவை. அதிக நெருக்கம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். இந்த நேரத்தில் வணிகர்கள் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். தம்பதிகள் இடையேயான அன்பு அதிகரிக்கும் மற்றும் வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குடும்ப வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.
மேஷம்
இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிமிடங்கள் பிறக்கின்றன. மன நலத்தில் மேம்பாடு, பெற்றோர் ஆதரவு கிடைக்கும். ஆனால் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் நிறைவேறும். திடீர் நிதி ஆதாயம் ஏற்படும். தம்பதிகள் இடையேயான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து தீர்ந்து உறவு மேம்படும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும்.
ரிஷபம்
வருமானம் அதிகரிக்கும். உழைப்புக்கு சரியான மதிப்பு கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை இனிமையாகும். தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இது வெற்றிக்காலம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருப்பினும், உங்கள் கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பணிகள் முடிவடையும்.
மிதுனம்
இந்த ராசிக்காரர்களுக்கு உறவுகளில் அமைதி நிலவுகிறது. ஆனால் உடல் நலத்தில் சிறிது கவனம் தேவை. ஒழுங்கான உணவும் ஓய்வும் வழிகாட்டும். ஆன்மீக பணிகளில் நாட்டமும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுடன் சம்பள உயர்வின் பலனைப் பெறுவார்கள். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஊழியர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் ஒரு சில ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்!!