50 ஆண்டுக்குப் பிறகு நிகழும் குரு, புதன், சூரியன் சேர்க்கை இனி இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்!!
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகிக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு,
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகிக்கக்கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். சூரியன், குரு, புதன் இந்த மூன்று கிரகங்களும் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் ஒன்று சேரப் போகின்றனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இந்த கிரகத்தினால் சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாக உள்ளது. இந்த திரிகிரக யோகம் 3 ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இந்த 3 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் என்பதை பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன் மற்றும் குருவின் சேர்க்கை மிகவும் நன்மை பயக்கும். திரிகிரகி யோகத்தால், கௌரவம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சவால்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன் மற்றும் குருவின் சேர்க்கை மிகவும் மங்களகரமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிர்ஷ்டம் பெருகும், பல வாய்ப்புகளை பெறலாம். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம், மத அல்லது மங்களகரமான நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன் மற்றும் குருவின் சேர்க்கையாம் அதிர்ஷ்டம் உண்டாகும். பொருள் வசதிகள் கூடலாம். வாகனம் அல்லது சொத்து வாங்கலாம். வியாபாரத்தில் திடீர் லாபம் கிடைக்கலாம். பணக்கார யோகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வேலைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் மோசமான பலன்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!!