வக்ர பெயர்ச்சியாகும் புதன் இனி இந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!!

நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவர்களின் குருவாக திகழ

By ·

நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்குபவர் தான் குரு பகவான். இவர், ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட பலன் நன்மைகளை பக்தர்களுக்கு கொடுக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும் குரு பகவான், ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கான அனைத்து விதமான யோகத்தை கொடுப்பார். அந்த வகையில், தேவர்களின் குருவாக கொண்டாடப்படும் குருபகவான் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி, குரு அதன் உச்ச ராசியான கடகத்தில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். குருவின் வக்ர பெயர்ச்சி காரணமாக, பல ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்ப்போம். 

மேஷம் 

குருவின் வக்ர பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும். எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது முக்கியம். காதல் விஷயங்களில் கவனம் தேவை. பிறரை முழுவதுமாக நம்பாமல் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் தகராறு மற்றும் மன உளைச்சல்களைச் சந்திக்க நேரிடும் என்பதால் ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுப்பது நல்லது.

ரிஷபம் 

குருவின் வக்ர பெயர்ச்சியால், ரிஷப ராசிக்காரர்கள் உறவுகளில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலை இழப்பு உள்ளிட்ட தொழில் பிரச்சினைகளும் ஏற்படலாம். கெட்ட பெயர், அவப்பெயர் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். முக்கியமான பணிகள் தாமதமாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது அவசியம். சகோதரர் வகையில் உறவு பாதிக்க வாய்ப்புள்ளது. உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்தினால் நல்லது நடக்கலாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது.

கடகம்

தெய்வீக குருவான குரு கடக ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருவதால், இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பணம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பணம் சம்பாதிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடையலாம்.  ஒவ்வொரு முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டியது அவசியம். செயல்களை நிதானத்துடன் செய்வது நல்லது. அலுவலக அரசியலில் ஈடுபட வேண்டாம். இந்த காலத்தில் முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். 

சிம்மம் 

குருவின் வக்ரப் பயணத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். சிறிய விஷயங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும். வீண் தகராறுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள். இந்த காலகட்டத்தில் கடன் வாங்குவது, கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். தேவையற்ற செலவுகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலருக்கு தொழில் ரீதியாக சில இழப்புகள் உண்டாகும்.

துலாம் 

துலாம் ராசிக்கு குருவின் வக்ரப் பயணம் எதிர்மறையான பலன்களைத் தரும். நிதிப் பிரச்சினைகள் ஏற்படும். குழந்தைகளால் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம். நெருங்கிய உறவுகள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் உண்டாகலாம். இந்தக் காலகட்டத்தில் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் சற்று உறவு மோசமடையலாம். பணியிடத்தில் உங்கள் முன்னேற்றம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் உங்களை தொந்தரவு செய்வார்கள்.

இதனையும் படியுங்கள் : குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இவர்களுக்கு குரு பகவானின் ஆசி எப்போதும் இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full