சுக்கிரனின் வக்ர நிலை காரணமாக நல்ல மாற்றத்தை காண போகும் ராசிக்காரர்கள்!!
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் நிலைகளை மாற்றும். அதே நேரத்தில் ராசிகளை மாற்றும். அந்த வகையில் வரும் மார்ச் 2, 2025 அன்று, சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிலைக்குச் செல்லவுள்ளார். இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். சிலருக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சுப
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களின் நிலைகளை மாற்றும். அதே நேரத்தில் ராசிகளை மாற்றும். அந்த வகையில் வரும் மார்ச் 2, 2025 அன்று, சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிலைக்குச் செல்லவுள்ளார். இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். சிலருக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சுப பலன்களைத் தரும், மற்றவர்களுக்கு அசுப பலன்களைத் தரும்.
ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் வக்ரமாகச் செல்லும்போது, அது ஜாதகத்தில் லாபம், செல்வம், அதிர்ஷ்டம் அல்லது வீரம் ஆகிய இடங்களில் மறைந்திருக்கும் வாய்ப்புகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது. அந்த வகையில், சுக்கிர பகவானின் வக்ர பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு வர உள்ள காலகட்டம் சிறப்பாக இருக்கும், நல்ல நாள்கள் காத்திருக்கின்றன. யார் அந்த ராசிகள் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் காணலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பான பலன்கள் காத்திருக்கின்றன. அதிர்ஷ்ட காற்று வீசும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு பணமும் கொட்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பல வழிகளிலிருந்து பணம் தேடி வரும். புதிய திட்டங்கள் மற்றும் நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும். சிக்கிய பணம் கூட திரும்பக் கிடைக்கலாம். நீண்ட கால நோய்களிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. நினைத்தது நிறைவேறும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தனுசு
சுக்கிரன் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். சொகுசான வாழ்க்கை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல வேலை உங்களை தேடி வரும். இந்த நேரத்தில் நீண்ட தூரப் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரம் அறிவைப் பெறுவதற்கு மிகவும் சுபமானது. பதவி உயர்வும் கிடைக்கும். வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் வாழ்க்கையுடன், உயர் கல்வியிலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளும் மிகச்சிறப்பானதாக மாறும். காதல் வாழ்விலும் பெரிய மாற்றங்கள் வரும். தொழிலும், வேலையிலும் நேர்மறையான மாற்றங்கள் நடக்கும். மன அமைதி இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடி கொள்ளும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உங்கள் கடன் தீரும், உங்கள் எதிரிகளை வெல்வீர்கள். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மேம்படும்.
இதனையும் படியுங்கள் : சுக்கிர வசியம் ஏற்பட பரிகாரம்