குபேரருடைய அருளால் வாழ்க்கையில் பஞ்சமே இல்லாமல் செல்வத்தை பெரும் ராசிகள்!!
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக கருதப்படும் குபேரருடைய அருளால் சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்கும். வாழ்க்கையில் பஞ்சமே இல்லாமல் வாழ்வார்கள் வீட்டில் மகாலட்சுமி அருளும் குபேரருடைய அருளும் இருந்தாலே செல்வத்திற்கு பஞ்சமி ஏற்படாது. எனவே வாழ்க்கையில்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக கருதப்படும் குபேரருடைய அருளால் சில ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்கும். வாழ்க்கையில் பஞ்சமே இல்லாமல் வாழ்வார்கள் வீட்டில் மகாலட்சுமி அருளும் குபேரருடைய அருளும் இருந்தாலே செல்வத்திற்கு பஞ்சமி ஏற்படாது. எனவே வாழ்க்கையில் செல்வமதிகரிக்க பணத்திற்கு பஞ்சம் இல்லாமல் வாழ மகாலட்சுமி மற்றும் குபேரனுடைய வழிபாடு முக்கியம். அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய இந்த இரண்டு தெய்வங்களையும் வழிபடுவதால் வீட்டில் அனைத்தும் நிறைந்திருக்கும். செல்வத்தின் கடவுளாக பார்க்கப்படும் குபேரருடைய அருள் கிடைத்தாலே வாழ்க்கையில் பணப்பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். அந்த வகையில் குபேர பகவானுடைய அருளுடன் மகாலட்சுமி தேவியாரின் ஆசியும் கிடைத்தால் செல்வத்திற்கு குறைவில்லாமல் வாழ முடியும். அந்த வகையில் குபேரருடைய அருளால் அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் சில ராசிகளை பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசி குபேரர் மட்டுமில்லாமல் சுக்கிரன் மகாலட்சுமி ஆகியிருடைய ஆசிகளையும் பரிபூரணமாக பெற்ற ராசி. ரிஷப ராசிக்கு சுக்கிர பகவானை அதிபதி என்பதால் வாழ்க்கையில் இவர்களுக்கு பணத்திற்கும் தானியத்திற்கும் குறைவிருக்காது. வாழ்க்கையில் சந்திக்க கூடிய அனைத்து சவால்களையும் எளிமையாக கடந்து செல்வார்கள். இவர்களிடத்தில் செல்வமும் நிறைந்திருக்கும் வெற்றியையும் காண்பார்கள். குபேரருடன் சேர்ந்து மகாலட்சுமி தேவியாரையும் ரிஷப ராசிக்காரர்கள் வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை தரும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு குபேரருடைய அருள் முழுமையாக இருக்கிறது. உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள் என்பதால் அவர்களுடைய வாழ்க்கையில் பணம் மற்றும் செல்வத்தைப் பெற்று மகிழ்வார்கள். ராசி அதிபதியான சந்திரனை போலவே நட்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். கடுமையான உழைப்பும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் இருந்தால் வெற்றியை குவிக்க முடியும். எந்தவிதமான தடை வந்தாலும் அதனை எளிதாக கையாளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு செல்வம் புகழ் அனைத்தும் வாழ்க்கையில் கிடைக்கும். தனித்தன்மையோடு விளங்குபவர்களாக துலாம் ராசிக்காரர்கள் இருப்பார்கள். சுக்கிரனின் ஆட்சியால் சுபிட்சமும் உண்டாகும். குபேரருடைய அருளை பெறுவதால் வாழ்க்கையில் பணத்திற்கும் தானியத்திற்கும் தட்டுப்பாடு இருக்காது. மகாலட்சுமியின் அருளும் இருப்பதால் வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்காது நேர்மறையான எண்ணங்கள் தான் நிறைந்திருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். குபேரருடைய அருள் எப்பொழுதும் இருப்பதால் தங்களுடைய தேவையை மட்டும் நிறைவேற்றாமல் தங்களை சார்ந்தவர்களுடைய தேவையும் பூர்த்தி செய்யும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குபேரருடைய ஆசி இருப்பதால் இவர்களுடைய வாழ்க்கையில் பணத்திற்கும் பஞ்சமே இருக்காது.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் எப்பொழுதுமே எதிர்காலத்தைப் பற்றிய நேர்மறை எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். குபேரருடைய அருள் பூரணமாக இருப்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பார்கள். ராசி அதிபதி ஆன குருவின் அருளும் சேர்ந்து கிடைப்பதால் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை பெறும். உதவி என்று வருபவர்களுக்கு மயக்கம் இல்லாமல் உதவி செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய வாழ்க்கையில் செல்வ வளம் எப்பொழுதும் நிறைந்து மனமகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
இதனையும் படியுங்கள் : சனிப்பெயர்ச்சியால் 2025 இல் பொற்காலத்தை பெறப்போகும் ராசிகள்!