புதன் மற்றும் சனி பகவானின் சேர்க்கையால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி இனி இந்த ராசிகளுக்கு பொற்காலம் தான்!!

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச

By ·

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரக பெயர்ச்சிகள் என்பது மிகவும் முக்கிய வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். சனி பகவான் கஷ்டத்தை மட்டுமல்ல, அளவில்லாத நன்மைகளையும் வழங்கக் கூடியவர். ஜோதிடத்தின் படி, செப்டம்பர் 17, 2025 அன்று இரவு 11:15 மணிக்கு, புதனும் சனியும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி கோணத்தில் இருப்பார்கள். இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 180 டிகிரி நிலையில் இருப்பது பிரதியுதி திருஷ்டியை உருவாக்கும். புதன் சனி சேர்க்கையால் உருவாகும் பிரதியுதி திருஷ்டியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளிலும் இது மிகப்பெரிய நன்மைகளை அள்ளித்தரும். யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம். 

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு, புதன்-சனி சேர்க்கை பல நல்ல வாய்ப்புகளைத் தரும். வேலையில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் என அனைத்தும் நல்லதாகவே நடக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு துணையாக இருக்கும். புதிய பாதைகள் திறக்கும். வாழ்வில் மன அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

கன்னி 

செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு உருவாகும் புதன் சனி சேர்க்கை அம்சத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கும். புதனின் செல்வாக்கால் செறிவு அதிகரிக்கும், மேலும் அவர்களால் எளிதாக படிப்பில் கவனம் செலுத்த முடியும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு நல்ல நேரம் கிடைக்கும். சில புதிய சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.‌ புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்‌. முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

மகரம் 

புதன் சனி சேர்க்கையால், மகர ராசிக்காரர்கள் சிறப்பு நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். வேலையில் இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளை பெற வாய்ப்புள்ளது. ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நிறைய நன்மைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் குபேர யோகம் பெறும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full