2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சனி மற்றும் குரு பகவானின் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்!!
2025 ஆங்கில புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நாம் அனைவரும் காத்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சிகள் என முக்கிய கிரக பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த பு
2025 ஆங்கில புத்தாண்டு விரைவில் பிறக்க உள்ளது. வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு நாம் அனைவரும் காத்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சிகள் என முக்கிய கிரக பெயர்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இந்த புத்தாண்டில் சனி மீன ராசிக்கும், குரு மிதுன ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இதன் காரணமாக 12 ராசியை சேர்ந்தவர்கள் மீதும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தங்களின் அன்றாட வாழ்க்கையில் சில நல்ல அல்லது மோசமான மாற்றங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் 3 ராசியினருக்கு கோடீஸ்வரராகும் யோகம் உள்ளது. இதில் சனி, குரு பெயர்ச்சிகளால் எந்தெந்த ராசிகளுக்கு சாதகமாகவும், லாபகரமானதாக அமைய உள்ளது என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மகரம்
சனி, குரு பெயர்ச்சியானது, மகர ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக அமைய போகிறது. முக்கியமாக இந்த சனி பெயர்ச்சியால் ஏழரை சனியில் இருந்து மகர ராசிக்காரர்கள் விடுபடவுள்ளனர். உங்கள் கவலைகள் தீருவதோடு, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வசதி வாய்ப்புகளும், வாழ்க்கையில் ஆடம்பரமும் அனுபவிக்க உள்ளீர்கள். இதுவரை சந்தித்து வந்த மன உளைச்சலில் இருந்து விடுபடுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதுடன் பண பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு அடுத்த ஆண்டு மிகவும் அற்புதமான ஆண்டாக இருக்கும். சனியின் தாக்கத்தினால் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். மேலும் எந்த வேலையை செய்தாலும் அதில் சிறப்பான வெற்றி, லாபம் உண்டாகும். குடும்பத்தில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் அது கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும். முக்கியமாக குரு பகவான் முதல் வீட்டிற்கு வருவதால் ராசியினரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம். வணிக வகுப்பினரும் நல்ல லாபம் ஈட்டுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையுடனான அன்பும் புரிதலும் அதிகமாகும். குடும்ப உறவுகளுக்கு இடையே புரிதல் அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் சூரியனால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகும் சில ராசிகள்!