2025 ஆம் ஆண்டு தொடங்கப் போகும் நிலையில் கிரகங்களுடைய ராசிகள் பாரி வருகின்றன அந்த நிலையில் சூரிய பகவானும் ராசி மாற்றம் அடையப்போகிறார். கிரகங்களுக்கு எல்லாம் ராஜாவாக இருக்கக் கூடிய பகவான் பதினாறாம் தேதி அன்று விருச்சிக ராசியில் சஞ்சரித்து புதனோடு இணையப் போகிறார்.எனவே புதாதித்ய ராஜயோகம் உண்டாக போகிறது. சூரிய பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதால் மேஷ ராசி முதல் மீன ராசி வரையில் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் ஏற்படும். சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதால் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் ஏற்பட போகிறது அவர்களைப் பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வெற்றி கிட்டும். வாழ்க்கை துணையோடு நேரத்தை செலவிடுவீர்கள். மேலும் விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய உழைப்பு பணியிடத்தில் நல்ல பலன்களை தேடிக் கொடுக்கும். மொத்தத்தில் நல்ல காலமாக அமையும்.
கடக ராசி

கடக ராசி காரர்களுக்கு விருச்சிக ராசியின் மாற்றம் பொருளாதார ரீதியாக நல்ல மாற்றத்தை பெறும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் மற்றவர்களிடம் சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். முதலீடு செய்வதற்கு இந்த காலகட்டம் மிகவும் ஏற்ற காலமாக அமையும். பணியிடத்தில் சக ஊழியர்களையும் மூத்தவர்களையும் மதித்து அவர்களுடைய ஆதரவையும் முழுவதுமாக பெறுவீர்கள்.
விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் தாக்கத்தால் வேலையில் வெற்றி கிடைக்கும். மேலும் உடல் நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து போகும். பொருளாதார நிதி வலுவாக இருக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் தாக்கத்தால் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தினரோடு நேரத்தை செலவிடுவதற்கான நேரமும் அமையும். பதவி உயர்வு கிடைக்கும். தாயின் ஆதரவை பெற்று மனமகிழ்ச்சியோடு தடைபட்ட வேலைகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சூரியபகவான் விருச்சிக ராசிகள் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அரசு வேலைக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும் பொருளாதார ரீதியாக அனைத்து காரியங்களிலும் சிறப்பாக செயல்படுவீர்கள். அனைத்து காரியங்களிலும் உங்களுடைய உழைப்பை போடுவீர்கள். புதிய நிலம் வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி 2025ம் ஆண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள் இவர்கள் தான்!


