செல்வம், பெருமை, செல்வாக்கு, செழிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு காரகத்துவம் பெற்ற கிரகமான குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 12 ராசிகளையும் முழுமையாக சுற்றி வர குரு பகவான் 12 ஆண்டுகாலத்தை எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவர் கடந்த மே 1, 2024 அன்று ரிஷப ராசிக்குள் நுழைந்தார். அவரது அடுத்த பெயர்ச்சி சுமார் 1 வருடத்திற்குப் பிறகு அதாவது 2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி நடைபெறும். அப்போது அவர் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைவார். புதனின் ராசியில் நடக்கும் குரு பெயர்ச்சியினாலும், பிப்ரவரி மாத வக்ர நிவர்த்தியினாலும், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு அதிக பலனை அடைந்து சொழிப்பாக இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியில் குரு பெயர்ச்சி நடைபெற உள்ள நிலையில், இந்த ராசியினருக்கு, அதிர்ஷ்டத்திற்கு குறைவிருக்காது. வருமானத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். தொழில் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பொருள் வசதியும் செல்வமும் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பதவி உயர்வு மற்றும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
சிம்மம்

குரு பெயர்ச்சியின் சுப பலன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். உங்கள் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
தனுசு

குரு பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் மிகவும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீது நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் உற்சாகம் பிறக்கும். திடீர் பணவரவு மூலம் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்ட காரியங்களில் வெற்றிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் 2027ஆம் ஆண்டு வரை செல்வங்களை குவிக்கப்போவது இந்த மூன்று ராசிகள் தான்!


