
மேஷம்
இன்று பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும். உங்கள் வேலை இன்று பலரும் பாராட்டும் வகையில் இருக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். எனவே உங்கள் எதிரிகளிடமிருந்து விலகி இருங்கள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரின் நிலை குறித்து நீங்கள் கொஞ்சம் கவலை ஏற்படும். படிப்படியாக, உங்கள் தந்தையின் உடல்நிலை மேம்படும்.

ரிஷபம்
சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். இன்று உடல்நிலையை முழுமையாக கவனித்துக் கொள்ளவும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்கள். உங்கள் உடல்நிலை மோசமடைய வாய்ப்புள்ளது. இன்று எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து விலகி இருக்கவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். மூத்தவர்களின் அறிவுரையும், ஒத்துழைப்பும் கிடைக்கும். ஆபத்தான செயல்களைத் தவிர்க்கவும்.

மிதுனம்
நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். மற்றவர்களின் சண்டையில் ஈடுபடாதீர்கள். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், நீண்ட பயணத்தை தவிர்க்கவும். குடும்ப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

கடகம்
நண்பர் மிகுந்த உதவியாகவும், அதிக ஆதரவாகவும் இருப்பார். அன்பான புன்னகையின் மூலம் உங்கள் காதலின் நாளை பிரகாசமாக்குங்கள். பிள்ளைகளின் திருமணம், தொழில் தொடர்பாக முக்கிய முடிவு எடுத்தீர்கள். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். இன்று மன அழுத்தம் அதிகரிக்கும். இன்று உங்களின் நிதிநிலமை சற்று மோசம் அடையும். நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம் கவனம் தேவை.

சிம்மம்
பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம், கவனம் தேவை. இன்று உங்கள் துணையின் உடல்நிலை சற்று கவலை ஏற்படுத்தும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் சாதகமாக இருக்கும்.

கன்னி
நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். இன்று வியாபாரிகளுக்கு சாதகமற்ற நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். எந்தவொரு பணப் பரிவர்த்தனைகளை கவனமாக செய்யுங்கள்.

துலாம்
நீங்கள் யோகா தியானத்துடன் நாள் தொடங்கலாம். நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் அமைதியும், பெரியவர்களின் ஆசையும் கிடைக்கும். உங்கள் மீது குடும்பத்தில் உள்ளவர்களின் மரியாதை கூடும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத்தேவைப்படும் நாள். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் பரஸ்பர கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தின் அமைதியைக் கெடுக்கும்.

விருச்சிகம்
இன்று மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். இன்று உங்களின் கவலைகள் குறையும். உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடு, சண்டைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள்.

தனுசு
பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு நபருக்கு கடன் கொடுத்திருந்தால், இன்று அந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். குழந்தைகளால் உங்கள் மனம் மகிழ்ச்சியடையும். இன்று நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக சில நல்ல முடிவுகள் எடுப்பீர்கள். இன்று புதிய வண்டி, வாகனம் வாங்க யோகமான நாள். பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் மூழு ஆதரவை பெறுவீர்கள்.

மகரம்
இன்று அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இன்று வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குடும்ப தேவைகளுக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியது இருக்கும். பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பணி சுமை ஏற்படும். உங்கள் துணை மூலம் பண பலன்களை பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணத்தை செலவிடுவீர்கள்.

கும்பம்
செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். தூரத்து உறவினரிடம் இருந்து எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இன்று வருமானம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று உங்களின் மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். குழந்தைகள் உடல் நலம் தொடர்பாக கொஞ்சம் கவலை ஏற்படும்.

மீனம்
இன்று நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் வீட்டு சூழல் நன்றாக இருக்கும். இன்று உங்களின் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். இன்று சமாதானமாக நடந்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் நண்பர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். ஷாப்பிங் செய்வதற்காக அதிக பணத்தை செலவிட வாய்ப்புள்ளது. இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும்.