Home ஆன்மிகம் பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் வீட்டில் செய்ய கூடாதவைகள்

பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் வீட்டில் செய்ய கூடாதவைகள்

பொதுவாக நம் வீட்டில் செல்வம் பெருகி வீடு செழிக்க வேண்டும் என்றால் வீட்டில் ஒரு சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அப்படி நாம் ஒரு சில தவறுகளை செய்தாலும் அதனை திருத்திக் கொள்ள வேண்டும். பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை திருத்திக் கொண்டு ஒரு சில விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் அப்படி செய்தால் நம் வீட்டில் பணக்கஷ்டமே வராது. மேலும் வீட்டில் சண்டைகள் சச்சரவுகள் இல்லாமல் இருந்தால் தெய்வம் குடியிருக்கும் என்று சொல்வார்கள் வீட்டில் எப்பொழுதும் சண்டைகள் போட்டுக் கொண்டே இருந்தால் தெய்வ சக்தி இருக்காது என்று சொல்வார்கள் எனவே வீட்டில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்கவும், தெய்வம் குடியேறவும் வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

-விளம்பரம்-

வீட்டில் தெய்வ படங்களோடு சேர்த்து வீட்டில் இறந்தவர்களின் படங்களை வைக்க கூடாது.

பொதுவாக சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் எள் தீபம் ஏற்றுவோம் அந்த வகையில் வீட்டில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம் ஆனால் எள் தீபம் ஏற்றக்கூடாது.

வீட்டில் சிவபெருமானின் ருத்ரத்தை ஒழிக்க செய்தால் வீட்டில் நன்மைகள் நடக்கும்.

வீட்டில் பூஜை செய்யும் போது நின்று பூஜை செய்யக்கூடாது மரப்பலகையிலும் அல்லது ஏதாவது ஒரு விருப்பம் அமர்ந்துதான் சாமி கும்பிட வேண்டும்.

-விளம்பரம்-

பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது பூஜை அறையை நோக்கி யாராவது தூங்கிக் கொண்டிருந்தால் அந்த சமயத்தில் விளக்கு ஏற்ற கூடாது. பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றும் போது தூங்குபவர்கள் வேறு அறையில் தூங்கினால் விளக்கு ஏற்றலாம் அதில் ஒன்றும் தவறு இல்லை.

விபூதியை தண்ணீரில் கலந்து பூசக்கூடாது.

வீட்டில் பூஜை செய்து முடித்த உடனே பெண்கள் மஞ்சள் குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

-விளம்பரம்-

வீட்டில் பூஜை அறை கிழக்கு திசையில் இருக்க வேண்டும் விளக்கு ஏற்றும் போதும் கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது.

வீட்டில் விரதம் இருக்கும் போது கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவைகள் கூடாது மேலும் கணவன் மனைவி குடும்ப உறவிலும் ஈடுபடக் கூடாது.

பெண்கள் செய்ய கூடாதவைகள்

பெண்கள் தலையை விரித்துக் கொண்டு விளக்கு ஏற்ற கூடாது.

பெண்கள் தலையில் ஈரத் துணியை கட்டிக் கொண்டும் விளக்கு ஏற்றக்கூடாது ஈரத் துணியை அணிந்து கொண்டும் பூஜை செய்யக்கூடாது.

சுப்ரபாதத்தை காலை எழுந்த உடனே தான் கேட்க வேண்டும் மதிய நேரத்திலும் மாலை நேரத்திலும் ஒருபோதும் கேட்கக் கூடாது.

காலையில் எழுந்ததும் நாராயணனை நினைத்துக் கொண்டும் இரவு சிவபெருமானை நினைத்துக் கொண்டும் தூங்க வேண்டும்.

வீட்டில் இன்பம் நிறைந்து இருக்க வீட்டின் நிலை வாசல் முற்றம் வீட்டின் பின்பக்கம் என எங்கு வேண்டுமானாலும் விளக்கு ஏற்றி விளக்கில் தெய்வத்தை காணலாம்.

வீட்டில் விளக்கு ஏற்றும் போது திரியை கைவிரலால் எடுத்து விடக்கூடாது அதற்கு தகுந்த ஏதாவது ஒரு குச்சியால் ஏற்றியும் இறக்கியும் விடலாம்.

ஆண்கள் செய்ய கூடாதவைகள்

ஆண்கள் விளக்கு ஏற்றவும் விளக்கை அணைக்கவும் கூடாது பெண்கள் தான் அதனை செய்ய வேண்டும்.

வீட்டில் சாமி கும்பிடும் போது வாழைப்பழத்தை நெய்வேதியமாக வைத்திருப்போம் அதனை பத்தி குத்தி வைக்கும் ஸ்டாண்ட் ஆக பயன்படுத்தக் கூடாது.

தேங்காய் உடைக்கும் போது தேங்காய் இரண்டு துண்டுகளாக உடைந்தால் மட்டுமே அதனை தெய்வத்திற்கு நெய்வேதியமாக வைக்க வேண்டும் பல துண்டுகளாக உடைந்தால் அதனை தெய்வத்திற்கு நெய்வேதியமாக படைக்கக்கூடாது.

இதனையும் படியுங்கள் : தப்பி தவறிக்கூட இவற்றையெல்லாம் இரவில் செய்யாதீங்க… அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்களாம்!