2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

- Advertisement -

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாவது நாள் என்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது அன்றுதான் திருதியை திதியும் வருகிறது. அட்சய என்பதற்கு வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொருள். அட்சய திருதியை அன்று நாம் எந்த செயல்பாடுகளை செய்தாலும் தங்கம் வெள்ளி மனை சொந்த வீடு போன்றவைகளை வாங்கினாலும் அந்த வருடம் முழுவதும் நம் வீட்டில் செல்வ செழிப்போம் உயர்வும் இருந்து கொண்டே இருக்கும்.

-விளம்பரம்-

புராணங்களின்படி பிரம்மர் தோற்றுவித்த கிருதாயுதத்தின் முதல் நாளானது அட்சய திருதியை ஆக கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை அன்று நாம் எந்த செயலை செய்தாலும் அது பல மடங்காக பெருகும். நாம் செய்யும் தான தர்மங்களும் பல மடங்கு பெருகும். என்னதான் பல விஷயங்களை செய்தாலும் அட்சய திருதியை அன்று மகாலட்சுமி தேவியின் அம்சமாக விளங்கக்கூடிய தங்கம் வாங்குவது மிகவும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பான நாள் என்று எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

ரிஷப ராசி

அட்சய திருதியை அன்று நட்சத்திர நாள் அன்று உருவாகக்கூடிய மங்களகரமான யோகத்தால் வாழ்க்கையில் மிகச் சிறப்பான அதிர்ஷ்டம் உருவாகும். வியாபாரத்தில் நீங்கள் என்றோ செய்த முதலீடு இன்று உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற்று அதன் மூலம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் தொழிலை உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளையும் முடிவுகளையும் எடுப்பதற்கு இந்த காலம் மிகவும் சிறந்தது. மொத்தத்தில் நீங்கள் எந்த விஷயத்தை செய்ய தொடங்கினாலும் அது உங்களுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும்.

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை மூலம் சுப நிகழ்வுகள் பல நடைபெறும். மங்களகரமான யோகத்தின் மூலம் பொன் பொருள் உங்களுக்கு சேரும். சுபயோகத்தின் மூலம் உயர்வினை பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு முறையான அங்கீகாரம் கிடைத்து இதுவரையில் நிலுவையில் இருந்த பல விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். நீங்கள் எந்த போட்டிகளில் கலந்து கொண்டாலும் அதில் வெற்றி மட்டுமே உங்களுக்கு நிச்சயம். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வும் உங்களுக்கு கிட்டும்.

கடக ராசி

அட்சய திருதியையின் மங்கள யோகத்தால் நீங்கள் செய்யும் வியாபாரத்தில் எதிர்பாராத மாற்றங்களும் வருமானமும் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் பெறுவீர்கள். ஏதாவது புதிய தொழில் தொடங்க வேண்டும் என்றாலும் இந்த காலத்தில் உங்களால் தொடங்க முடியும். உங்கள் வீட்டில் திருமணம் மூலமாக புது உறவுகளும் குழந்தை பேறு மூலமாக புதிய உறவும் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

-விளம்பரம்-

துலாம் ராசி

அட்சய திருதியை நாளன்று துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் செழிப்பும் மகிழ்ச்சியும் பன்மடங்காக இருக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மரியாதையை அதிகரித்து உங்களுக்கு தொழில் வாய்ப்புகளும் வருமானத்திற்கான வாய்ப்புகளும் உயர்ந்து கொண்டே இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி குறைந்து சம்பள உயர்வு ஏற்பட்டு அதன் மூலம் நீங்கள் மனதிற்கு பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு ராசி

அட்சய திருதியைக்கு பிறகு தனுசு ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் நடக்கும். பொருளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு உயர்வுகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயர்ந்து கொண்டே இருக்கும். உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் நிறைந்து இருக்கும். உடல் ஆரோக்கியமும் மிகச் சிறப்பான முறையில் இருக்கும் பண உயர்வும் கிடைக்கும். புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் வேலை பார்க்கும் அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து பதவியும் உயரும் அனைத்து சூழலும் உங்களுக்கு சாதகமான முறையில் அமையும்.

இதனையும் படியுங்கள் : அட்சய திரிதியை அன்று தங்கத்தை தவிர அதிர்ஷ்டம் வருவதற்கு வாங்க வேண்டிய மற்ற பொருட்கள்

-விளம்பரம்-