அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது. எனவே மகாலட்சுமியின் அருளை பெறுவதற்காக இந்த நாள் அன்று வேறு சில பொருட்களையும் வாங்குவது சிறப்பானதாக இருக்கும்
அட்சய திரிதியை அன்று புதிய பொருட்களை வாங்குவதற்கான காரணம்
செல்வ செழிப்பை ஏற்படுத்தக்கூடிய மங்களகரமான நாள் அட்சய திருதியை என்பதால் அந்த நாளன்று நாம் தங்கம் வெள்ளி வீடு சொத்துக்கள் புதிய வாகனங்கள் போன்றவற்றை வாங்குவதை வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தங்கம் மிகவும் விலை உயர்வு எனவே தங்கம் வாங்க முடியாத சூழலில் உள்ளவர்கள் வேறு எந்த பொருட்களை வாங்கினால் அந்த நாள் என்று மகாலட்சுமியின் அருளை பெற முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்
அட்சய திரிதியையில் வரும் யோகம்

2024 ஆம் வருடத்தில் அட்சய திரிதியை மே 10ம் தேதி வருகிறது. மேலும் இந்த ஆண்டு மங்களகரமான வெள்ளி கிழமையில் ரோகினி நட்சத்திரத்துடன் சுகர்ம யோகமும் இணைந்து வருகிறது. ஜோதிட ரீதியாக இந்த நாளில் பல சுப கிரகங்கள் ஒன்று கூடி மங்கள யோகங்களை வழங்கப் போகிறது. எனவே இந்த நாள் மிகவும் மங்களகரமான முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் வெள்ளி தங்கம் போன்ற விளைவு உயர்ந்த பொருட்களை மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற எந்தவிதமான கட்டாயமும் இல்லை இந்த நாள் என்று மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு சில முக்கியமான மங்களமான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்தால் வருடம் முழுவதும் அந்த பொருட்கள் உயர்ந்து கொண்டே தான் இருக்கும் அதோடு மகாலட்சுமி தேவியாரின் அருளையும் பெற முடியும்
அட்சய திரிதியை அன்று வாங்க வேண்டிய பொருட்கள்
அரிசி
பார்லி அரிசி பச்சரிசி போன்றவற்றை இந்த நாளில் வீட்டில் வாங்கி வைப்பது மிகவும் மங்களகரமானது. பச்சரிசியை வாங்கி வைக்க விட்டாலும் வீட்டிற்கு சமையலுக்கு பயன்படும் அரிசியை வீட்டில் வாங்கி வைக்க வேண்டும்.
சோழி
சிறிதளவு சோழிகளை வாங்கி அதனை ஒரு சிவப்பு துணியில் முடிந்து பூஜை அறையில் மகாலட்சுமி தேவியாரின் படத்திற்கு அருகே அல்லது பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். மேலும் இதனை வீட்டின் பீரோவிலும் வைக்கலாம் இதனால் வீட்டில் பொருளாதார நிலையும் செல்வ வளமும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
மண்பானை
அட்சய திரிதியை நாளன்று வெள்ளி தங்கம் வீடு மனை போன்றவைகளை வாங்க முடியாதவர்கள் மண்ணால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருள் அல்லது மண்ணால் செய்த மண்பானை வாங்கி வந்து வீட்டில் வைத்தால் மகாலட்சுமி தேவியாரின் மனமகிழ்ந்து அந்த வீட்டில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் மகாலட்சுமி தேவியார் கொடுப்பார்
லட்சுமியின் அருளை தரும் பொருட்கள்
வலம்புரி சங்கு
சங்கு என்பது சிவபெருமானுக்கும் பெருமாளுக்கும் மகாலட்சுமி தேவியாருக்கும் உரிய ஒரு மங்களமான பொருள் என்று சொல்லலாம். அதிலும் வலம்புரி சங்கு மிகவும் அபூர்வமானது. அட்சய திரிதியை அன்று வலம்புரி சங்கினை வாங்கி வந்து பெருமாளின் பாதத்திற்கு அருகில் வைத்து அபிஷேகம் பூஜைகள் செய்து வழிபட்டால் தேவையான அனைத்து ஐஸ்வர்யங்களும் பெருகிக்கொண்டே தான் இருக்கும்.
ஸ்ரீ யந்திரம

மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீ எந்திரம் அல்லது ஸ்ரீ சக்கரத்தை அந்த நாளன்று வீட்டின் பூஜை அறையில் வாங்கி வைத்து வழிபடுவது மிகவும் சிறந்தது. ஸ்ரீ சக்கரம் அல்லது ஸ்ரீ எந்திரம் வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் முப்பெரும் தேவர்களும் குடியேறுவார்கள். ஸ்ரீ எந்திரத்திற்கு குங்கும அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது குடும்பத்தில் பலவிதமான சுபிட்சத்தை ஏற்படுத்தும்.
உப்பு
உப்பு மிகவும் முக்கியமான மங்களமான ஒரு பொருள் அனைத்து மங்கள நிகழ்சிக்கும் முதலில் உப்பு வாங்கி வைப்பது மிகவும் சிறப்பானது. மகாலட்சுமி தேவியார் பாற்கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் அவளின் அருளை பெறுவதற்கு வீட்டில் உப்பு வாங்கி வைத்து வழிபடலாம்.
மஞ்சள்
மஞ்சள் மிகவும் மங்களகரமான ஒரு பொருள் மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கயிறு வாங்கி வைத்து வீட்டில் வழிபடுவது அன்றைய தினத்தில் மிகவும் சிறப்பானது.
இதனையும் படியுங்கள் : அட்சய திரிதியையின் சிறப்புகள்





