சைவம்Reading time · 1 min
மங்களூர் வெள்ளரிக்காய் சாம்பார் | Mangalore Cucumber Sambar
சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம்முடைய தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் இந்த சாம்பாரும் ஒன்று. நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு உணவு இட்லி, தோசையாக இருக்கும். அதற்கு தொட்டு சாப்பிட தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவோம். எப்போதும் இதே வைத்து சாப்பிடுவது சலிப்பாக இருக்கும். புதிதாக செய்தால் சுவையாக, டேஸ்டாக, சாப்பிட ஆர்வமாக இருக்கும். அந்தவகையில் இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட மங்களூர் ஸ்டைலில் வெள்ளரிக்காய் சாம்பார் செய்து பாருங்கள்.





