- தயாரிப்பு
- 10 நிமிடம்
- சமையல்
- 15 நிமிடம்
- மொத்தம்
- 25 நிமிடம்
- பேருக்கு
- 6
- சமையல் முறை
- Indian
- உணவு வகை
- Side Dish
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தனியா, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தேங்காய், தக்காளி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் கருணைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி சிறிதளவு வேகவைத்து எடுத்து கொள்ளவும். பின் அதனை எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து வேக விடவும்.
பின் கருணைக்கிழங்கை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கி கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கருணைக்கிழங்கு கிரேவி தயார்.






