- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 6
- Cuisine
- Andhra
- Course
- Lunch
Ingredients
Method
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் தனியா, வெந்தயம், வர மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பின் ஒரு மண் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி புளிக்கரைசல், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
பின் இது நன்கு கொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும். மீன் வெந்தவுடன் சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆந்திரா மீன் கறி தயார்.






