- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மட்டன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் சால்னா தயார்.






