- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Kerala
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காஷ்மீர் மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, வினிகர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் நறுக்கிய சிக்கன் துண்டுகள், நாம் அரைத்த மசாலா, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேங்காய் துருவல், பொரித்த சிக்கன் துண்டுகள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரளா சிக்கன் ஃப்ரை தயார்.






