- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வேகவைத்த முட்டையை இரண்டாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் புளி கரைசல் சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். அதன்பிறகு வேகவைத்த முட்டை துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான எக் தவா மசாலா தயார்.






