- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Lunch
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை மீல் மேக்கருடன் சேர்த்து அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து ஊற வைத்து கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் நாம் கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய் பால் சேர்த்து வதக்கவும்.
அதன்படி அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெள்ளை பிரியாணி தயார்.






