- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் வாழைக்காயை தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கிக் விட்டு உப்பு கலந்து தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, சோம்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காய் சேர்த்து பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான வாழைக்காய் மிளகு வறுவல் தயார்.






