- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Lunch
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் துருவிய பீட்ரூட், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பு, பூண்டு, காஷ்மீர் மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் கலவையை சேர்த்து நன்கு கலந்து புளி தண்ணீர், உப்பு, தேவையான அளவு தண்ணீர், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் ரசம் தயார்.






