- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Tamilnadu
- Course
- Side Dish
கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. நண்டு ரெசிபி பல இருந்தாலும் நண்டினை பெரும்பாலும் கிரேவி, ரசம், சூப் செய்து சாப்பிடுவார்கள். ஆகவே, இப்பதிவில் செட்டிநாடு நண்டு மசாலா எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Ingredients
Method
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மல்லி, மிளகு, சோம்பு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
அதன்பிறகு நண்டு வெந்ததும் கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு நண்டு மசாலா தயார்.






