ஜோதிடத்தில் சந்திரனும் ஒரு முக்கிய கிரகனமாகும். சந்திர கிரகனம் ஒரு ராசியில் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே நிலைக்கும். ஒவ்வொரு இரண்டரை நாட்களுக்கு ஒருமுறையும் தனது ராசியை மாற்றிக்கொள்ளும். அந்த வகையில் விசுவாவசு மாசி 5-ஆம் நாள் சர்வ அமாவாசை தினமான இன்று சந்திரன் கும்ப ராசியில் குடியேறுகிறார். கும்ப ராசியில் குடியேறும் சந்திரன் அங்கு ஏற்கனவே குடியிருக்கும் சூரியனம், புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய கிரகங்களுடன் சிறப்பு தொடர்பை உண்டாக்குகிறார். இந்த தாக்கம் ஆனது அனைத்து ராசியினரின் வாழ்க்கையிலும் தனித்துவமான பலன்களை கொண்டு வருகிறது. அனால் அதிக நன்மைகளை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

மேஷ ராசியினர் தங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த சில தினங்களாக எதிர்கொண்டு வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமான ஒரு உறவு ஏற்படும். கடின உழைப்பு நல்ல பலன் இருக்கும். பல நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். குடும்ப உறவுகளின் பொருளாதார நிலை மேம்படும். நிறைய பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. ஆனால் அது உங்களுக்கு வெற்றியையே பெற்று தரும்.
கடகம்

கடக ராசி கொண்டவர்கள் தங்கள் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோகியத்தில் எதிர்பார்த்த மாற்றம் காணும் ஒரு தினமாக இன்று இருக்கும். குடும்ப வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மனஸ்தாபங்களுக்கு தீர்வு காண்பார்கள். உடல் ஆரோகியத்தில் எதிர்பார்த்த மாற்றம் காண்பீர்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான தெளிவும் பிறக்கும். கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். போட்டி தேர்வுகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். அங்கீகாரமும் புகழும் உங்களை தேடி வரும்.
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் ஒரு தினமாக இன்று இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் காணப்பட்ட போட்டிகள், தொழில் போட்டிகள் குறையும். முதலீடுகள் வழியே எதிர்பார்ப்புக்கு அதிகமாக வருமானமும் கிடைக்கும். நிம்மதியான மற்றும் மன நிறைவான வாழ்வுக்கு வழி காட்டும். தொழிலை விரிவுப்படுத்தும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். கடின உழைப்பு நல்ல பலன் இருக்கும். வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. வாழ்க்கையில் அமைதி அதிகரித்து மகிழ்ச்சி பெருகும்.
துலாம்

துலாம் ராசி கொண்டவர்களின் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும் ஒரு தினமாக இன்றைய தினம் பார்க்கப்படுகிறது. முதலீடுகளை பெறும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை செய்து முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கடன் பிரச்சனை இருந்தால் அது தீரும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் லாபத்தை தரும். கல்வி மற்றும் கலைத்துறையில் வெற்றியை பெற முடியும்.
மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய தினம் மாற்றத்திற்கான ஒரு தினமாக இருக்கும். பல நாட்களாக தங்கள் பணியிடத்தில் செய்து முடிக்க முடியாமல் இருந்த பணிகளை முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்திருக்கும். உங்கள் நேர்மைக்கான பரிசு கிடைக்கும். காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல மாற்றம் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2026ல் சனியின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு யோகம் தான்!!




