ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் சீரான கால இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.கிரகங்கள் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கும் போது அவை சில சமயங்களில் ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் செல்வம், சுகம், ஆடம்பரத்தை தரக்கூடிய சுக்கிர பகவான். மிதுன ராசியில் குரு பகவானுடன் சுக்கிரன் தற்போது சேர்ந்து சஞ்சிரிக்கிறார். ஜூன் 8ம் தேதி வரை சுக்கிரன் மிதுனத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் அருளால் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு துன்பங்கள் விலகி நன்மைகளும், செல்வ நிலை உயரக்கூடியதாக அமையும். அந்த வகையில் எந்தெந்த ராசிகள் நன்மை அடையப் போகிறீர்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்

ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் தன ஸ்தானத்தில் உங்கள் ராசி அதிபதியின் நகர்வு உங்கள் பொருளாதார நிலைய முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் எனக்குமான சூழல் உருவாகும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். இந்தக் காலத்தில் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும் என்பதால் முயற்சிகளை அதிகப்படுத்தவும். தடைபட்ட பணத்தை மீட்பதற்கான காலமாக இருக்கும். மேலும், கடந்த கால முதலீடுகளால் எதிர்பாராத லாபத்தை சம்பாதிக்கலாம். உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், இதனால் பல்வேறு பணிகளில் தடையின்றி பங்கேற்க முடியும்.
மிதுனம்

சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் சொந்த ராசியான மிதுன ராசியில் பெயர்ச்சி செய்கிறார். கிரக சேர்க்கை, பெயர்ச்சியால் உங்கள் புரிதல் மற்றும் தொடர்புத் திறன்கள் மூலம் உறவுகளைப் புதுப்பிக்க முடியும். இந்த நேரத்தில், எந்தவொரு ஆலோச்னைக் கூட்டத்திலும் உங்கள் கருத்து வரவேற்கப்படும். சமூக வட்டத்தை மேம்படுத்துவதற்காகப் பணம் செலவழிக்க நேரிடலாம். வியாபாரிகளுக்கு இந்த யோகம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப்போகிறது, இதனால் அவர்கள் பெரிய லாபத்தை அடைய முடியும். புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். ஆக மொத்தம் இந்த காலகட்டம் சிறப்பான காலமாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு சுக்கிரன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் அதிகமாக நடக்கும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்திலும் பணியிடத்திலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவு பெறுவீர்கள். நிதி இலக்குகளை அடைவீர்கள். சட்டப் போராட்டங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக முடிவடையும். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளைக் கூட தோற்கடிக்க முடியும், இது வாழ்க்கையில் உங்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை அளிக்கும்.
துலாம்

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு ராசி அதிபதியான சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது உங்களுடைய சூழ்நிலையை மேம்படுத்த மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தந்தை போன்ற பெரிய நபர்களையும் ஆலோசனை உங்கள் உயர்வுக்கு காரணமாக இருக்கும். இந்த காலத்தில் உங்களுடைய மன ரீதியான வலிமை அதிகரிக்கும். உறவுகளை மேம்படுத்துவீர்கள். உங்கள் உடல் நலம் முன்னேற்றம் அடையக் கூடும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் சிறப்பான உறவை பராமரிக்கலாம்.
தனுசு

தனுசு ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த கஜலட்சுமி ராஜயோக அமைப்பு உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை விலக்கவும், பணியிடத்தில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க உதவும். புதிய நபர்கள் உங்கள் வாழ்க்கையில் நுழைவார்கள். இந்த காலத்தில் நீங்கள் ஆடம்பரங்களையும் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். வாழ்க்கையில் மன அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும், நீண்ட காலமாக மனதில் இருந்த குழப்பம் இப்போது முடிவுக்கு வரும். உங்கள் செயல்பாடுகளில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். கல்வி துறையில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கிரகண யோகம் 2026



