- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Lunch
Ingredients
Method
முதலில் பாசிப்பருப்பு மற்றும் கோதுமையை தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பெருங்காயத்தூள், பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் ஊற வைத்த பாசிப்பருப்பு மற்றும் கோதுமையை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் கிச்சடி தயார்.






