- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 6
- Cuisine
- Indian
- Course
- Side Dish
Ingredients
Method
முதலில் காலிபிளவர் மற்றும் உருளைக்கிழங்கை நறுக்கி வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வதக்கவும்.
பின் நாம் வேகவைத்த காலிபிளவர் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பிறகு மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காலிபிளவர் உருளை ரோஸ்ட் தயார்.






