கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறும் நிகழ்வை ‘சங்கராந்தி’ என்று அழைப்பார்கள். இந்த சூரிய பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கும் சுப பலன்கள் உண்டாக இருக்கிறது. ஜோதிட ரீதியாக மே 16, 2026 மிகவும் முக்கியமான நாள். அன்று, கிரகங்களின் அரசன் சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் பிறக்கக்கூடிய வைகாசி தமிழ் மாதத்தில் சில ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்றாலும், சிலர் பெரிய அளவில் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த கிரக அமைப்பு 12 ராசிகளின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் 3 ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். யார் அவர்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மிதுனம்

மிதுன ராசிக்கு இந்த வைகாசி மாதம் பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். குறிப்பாக உத்தியோகஸ்தர்கள் தங்களுடைய பணியிடத்தில் பல சவால்களை மற்றும் பணி சுமையை சந்திக்க நேரிடும். உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல் உங்கள் கடமைகளை செய்வது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது இடம் மாற்றம் கிடைக்காமல் வருந்துவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை அமைய தாமதமாகும்.
கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வைகாசி மாதம் உங்களுடைய வேலை மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நிதிநிலை மற்றும் வேலை தொடர்பாக சில விஷயங்கள் மன அழுத்தத்தை தரக்கூடியதாக இருக்கும். பணிச்சுமை காரணமாகவும், கவலை காரணமாக உங்கள் உடல் நலம் மற்றும் உணவு விஷயத்தில் அக்கறை செலுத்த முடியாத சூழல் இருக்கும்.
துலாம்

துலாம் ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய அஷ்டமஸ்தானத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுடைய உடல் நலம் தொடர்பாக சில சங்கடங்களைத் தர வாய்ப்பு உண்டு. தோல் நோய், பித்தப்பை பிரச்சனை போன்றவை தொந்தரவு தர வாய்ப்பு உண்டு அதனால் கூடுதல் கவனம் செலுத்தவும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது அவசியம். வீண் வழக்குகளில் ஈடுபடுவதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் அதனால் உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. வேலையில் அலைச்சலும், சரியான தூக்கமின்மை பிரச்சனையும் ஏற்படும்.
கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு சுகஸ்தானத்தில் சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சங்கடத்தை தரக்கூடியதாக அமையலாம். உடல் நலனில் கவனம் செலுத்தவும். ஓய்வு கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். இந்த மாதத்தில் நீங்கள் வேலை மற்றும் உங்களுடைய தொழில், வியாபாரம் தொடர்பாக சரியான திட்டமிடலுடன் செயல்படவும். உங்கள் தூக்கம் குறைந்தால் கோபம் அதிகரிக்கும் என்பதால் பிறரிடம் நிதானமாக நடந்து கொள்ள மாட்டீர்கள். எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதால் தேவையற்ற செலவுகள் செய்து கஷ்டப்படுவீர்கள். பண பரிவர்த்தனையில் கவனமாக இல்லாவிட்டால் சிக்கல்.
இதனையும் படியுங்கள் : 2026 கஜகேசரி யோகம் பலன்




