2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

- Advertisement -

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான் தன்னுடைய பயணத்தை மேஷ ராசியில் ஆரம்பிக்கும் ஒரு மாதமாக இந்த சித்திரை மாதம் விளங்குகிறது. அனைத்து கிரகங்களும் தங்களுடைய ஆற்றலை புதுப்பித்துக் கொள்ளும் மாதமான இந்த சித்திரை மாதத்தில் தான் அதிக அளவில் கோவில் திருவிழாக்களும் கும்பாபிஷேகங்களும் நடக்கும். என்னதான் நாம் மூன்று மாதங்களில் வரும் அமாவாசைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தாலும். சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசையும் மிகவும் சிறப்பானதாகும்.

-விளம்பரம்-

அமாவாசை

ஆடி தை மற்றும் ஐப்பசியில் வரக்கூடிய மஹாளய அமாவாசை ஆகிய மூன்று மாதங்களில் வரக்கூடிய அமாவாசைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இந்த அமாவாசைகளில் பித்ருகளை நினைத்து வணங்கி அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தான தர்மம் வழங்கி வணங்கினால் அவர்களுடைய ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படும். மாதாமாதம் வரக்கூடிய ஒவ்வொரு அமாவாசையிலும் நாம் முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் ஆனால் ஆடி ஐப்பசி இந்த மூன்று மாதங்களிலும் வரக்கூடிய அமாவாசையில் நிச்சயமாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கிய அவர்களின் நினைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

சித்திரை அமாவாசை

இந்த மூன்று மாத அமாவாசையை தவிர தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாத அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 2024 ஆம் ஆண்டு சித்திரை அமாவாசை மே ஏழாம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. காலையில் 11.18 மணிக்கு துவங்கும் அமாவாசை திதி மே எட்டாம் தேதி காலை 9.19 மணி வரைக்கும் இருக்கும். என்னதான் மே எட்டாம் தேதி வரையும் அமாவாசை திதி இருந்தாலும் காலை நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது எனவே மே 7ஆம் தேதி அன்று குளித்து புனித நீராடி விட்டு காலை 11 மணிக்கு மேல் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்தது.

சித்திரை மாத அமாவாசையின் சிறப்புகள்

சித்திரை மாதம் பல நல்ல காரியங்களுக்கு உகந்த மாதமாக இருந்தாலும் அமாவாசைக்கும் மிகவும் உகந்த மாதம். இந்த மாதத்தில் வரக்கூடிய அனைத்து திதிக்கும் நிறைய சிறப்புகள் உண்டு அதேபோல் அமாவாசை திதிக்கும் நிறைய சிறப்புகள் உண்டு. இந்த சித்திரை மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் படைத்த வழிபட்டால் திருமண தடை குழந்தை பாக்கியம் வேலைவாய்ப்பு தொழில் என அனைத்தும் சிறந்து விளங்கும். அமாவாசையன்று உணவு உடை போன்றவற்றை தானமாக வணங்குவது நம்முடைய பாவங்களை நீக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்று தானம் வழங்குவது இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்

சூரிய பகவானும் சித்திரை அமாவாசையும்

சித்திரை மாதத்தில் தான் சூரிய பகவான் சரியாக கிழக்கு திசையில் உதிப்பார். சித்திரை மாத அமாவாசையில் நவகிரக வழிபாடு செய்தால் மனக்குழப்பங்கள் நீங்கி வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். மேலும் அந்த வகையில் சித்திரை மாத அமாவாசையில் விரதம் இருந்து சூரிய பகவானுக்கு நீரிட்டு வழிபட்டால் நம்முடைய ஜாதகத்தில் சூரிய பகவானின் பலம் அதிகரிக்கும்.

-விளம்பரம்-