Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் தப்பி தவறிக்கூட இவற்றையெல்லாம் இரவில் செய்யாதீங்க… அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்களாம்!

தப்பி தவறிக்கூட இவற்றையெல்லாம் இரவில் செய்யாதீங்க… அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவீங்களாம்!

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. எதையும் மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் காலத்திற்கும், நேரத்திற்கும் உண்டு என்பார்கள். இதனால் தான் நல்ல காரியங்கள் துவங்குவது முதல், கடன் அடைப்பது, கடன் வாங்குவது, வாகனம் வாங்குவது, சீரமைப்பது, விற்பது என அனைத்தையும் நல்ல நேரத்தில் செய்ய வேண்டும் என்கிறார்கள் நம்முடைய பெரியவர்கள்.

-விளம்பரம்-

சாஸ்திரத்தில் என்ன செய்யக்கூடாது, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் எந்த ஒரு நல்ல செயலைத் தொடங்கினாலும் அது வெற்றி பெறும். தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நம் அன்றாட வேலையை தொடங்கினால் விரைவில் வெற்றிகளைக் குவித்து செல்வந்தராக முடியும் என்பது ஆன்றோர்களின் வாக்கு, இதே போல மாலை அந்தி நேரத்தில் எந்தெந்த செயலை செய்யாமல் இருந்தால் குடும்பத்திற்கு நல்லது என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

வீட்டை பெருக்குதல்

நம்மில் பெரும்பாலும் செய்யும் தவறு இரவு நேரத்தில் வீட்டை கூட்டி பெருக்குவது, வீட்டில் விளக்கு வைத்த பின்‌ வீட்டை பெருக்கி குப்பை அள்ளி வெளியே கொட்டுவது வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யத்தை நாமே வெளியே கொண்டு வீசுவதை போல ஆகும். அதனால் இரவு வேளையில் விளக்கு வைத்த பிறகு வீட்டை கூட்ட கூடாது.

கடன் கொடுப்பது

இரவு நேரத்தில் வெள்ளை நிற பொருட்களை கடனாக வாங்குவது நாம் பிறருக்கு கொடுப்பது, பணத்தை கடனாக வாங்குவது, விளக்கு வைத்த பிறகு பணத்தை எடுத்துச் சென்று கடையில் பொருள்களை வாங்குவது, இது போன்றவற்றை எல்லாம் நாம் தவிர்த்து வந்தோமானால் நம்மிடம் இருக்கும் லட்சுமி கடாட்சம் நம்மை விட்டு நீங்காமல் இருக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதிலும், உப்பு, ஊசி, தயிர், பால் போன்றவற்றைக் கடன் வாங்கக் கூடாது இரவு நேரங்களில் இதைப் பிறருக்குக் கொடுக்கக் கூடாது.

நகம் வெட்டுதல்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, மாலை அல்லது இரவில் நகங்களை வெட்டக்கூடாது. இப்படி செய்வதால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகும். நம்பிக்கையின் படி, மாலை நேரம் லட்சுமி தேவியின் வருகை செய்யும் நேரம். இந்த நேரத்தில், அவள் கோபமடைந்து உங்கள் வீட்டை விட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது. இதனால் வீட்டில் வறுமை ஏற்படும்.

-விளம்பரம்-

முடி வெட்டுதல்

முடி எப்பொழுதும் இந்து புராணங்களில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது மற்றும் நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. நல்ல நேரங்களில் முடி வெட்டுவது நமக்கு மகத்தான பலன்களையும் வெற்றியையும் தரும். அதேபோல், இரவு நேரத்தில் முடி வெட்டுவது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும்.

தானம்

தானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும் இரவு நேரத்தில் தானமாக கொடுக்கும் சில பொருட்கள் தானம் கொடுப்பவர்களின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். நாம் வீட்டில் பயன்படுத்தும் கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், அரிவாள், அரிவாள்மனை, ஊசி, சுத்தியல், போன்ற கூர்மையான பொருட்களை நாம் யாருக்கும் கடனாக கொடுக்க கூடாது. எத்தனை பழகியவர்களாக இருந்தாலும் அரிவாள் மனை போன்ற பொருட்களை கொடுப்பது நல்லது அல்ல.

இதனையும் படியுங்கள் : வலம்புரி விநாயகரை வழிபடும் முறையும், வழிப்படும் போது செய்ய கூடாதவையும்!

-விளம்பரம்-