Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே நிரம்பி இருக்கும் அதனால் அத்தகைய இடத்திற்கு செல்லும் போது நாமும் நேர்மறையான எண்ணங்களோடும் ஆற்றலோடும் தான் செல்ல வேண்டும். கோவில் என்னுள்ளே நுழையும் போது கோவிலில் நுழைவு வாயிலில் உள்ள முதல் படிக்கட்டில் கால் வைக்காமல் அதை தாண்டி செல்வது வழக்கம் அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதனை மிதித்து செல்லாமல் தாண்டியே செல்வார்கள். அதை பார்க்கும் பொழுது நமக்கும் படிக்கட்டை ஏன் மிதிக்காமல் தாண்டி செல்கிறார்கள் நாமம் அப்படிதான் செல்ல வேண்டுமா என்ற எண்ணம் எழும். அந்த நேரத்தில் நாமம் அந்த படிக்கட்டை மிதிக்காமல் தாண்டி தான் கோவிலில் உள்ளேன் நுழைந்திருப்போம் அதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

சாஸ்திரம் கூறும் காரணம்

எப்பொழுதுமே நாம் கோயிலுக்கு சென்றால் அங்கு உள்ள குழாயில் பாதங்களை நனைத்து தலையில் தண்ணீரை தெளித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் அதற்கான காரணம் என்னவென்றால் நாம் நம்மை சுத்தமாக வைத்துக் கொண்டுதான் கோயில் என் கோபுரத்தையும் கலசத்தையும் வழங்கிவிட்டு பிறகு துவார பாலகர்களை வழிபட வேண்டும். கோவிலின் நுழைவு வாயிலில் படிக்கட்டு மிகப்பெரியதாக இருந்தால் கூட அதனை நாம் தாண்டியே செல்ல வேண்டும். அவ்வாறு நாம் செல்லும்போது நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் அழிந்து நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

கோவிலின் நுழைவு வாயிலில் உள்ள படிக்கட்டை மிதித்து செல்லாமல் தாண்டி கொண்டு சென்றால் நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் சுமந்து கொண்டு செல்வதாக அர்த்தம் என்று கூறப்படுகிறது. எனவே கோவிலுக்கு செல்லும்போது நுழைவாயிலில் உள்ள படிக்கட்டை தாண்டி தான் எப்பொழுதும் செல்ல வேண்டும்.

இதனையும் படியுங்கள் : இந்த முருகர் கோவிலுக்குள் மட்டும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது ஏன் தெரியுமா ?