இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போடுவதிலிருந்து வீடு கட்டி முடித்த பிறகு அதில் வாழ்ந்து வைக்கும் ஒவ்வொரு பொருள்கள் வரைக்கும் அனைத்திலும் வாஸ்து சாஸ்திரம் பார்த்து தான் செய்ய வேண்டும். அந்த வகையில் ஒரு வீட்டில் லட்சுமி தேவி குடியேறுவதற்கும் வீட்டிற்கு வருவதற்கும் நாம் நம்முடைய வீட்டில் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் ஒரு சில குறிப்பிட்ட நேரத்தில் கதவு ஜன்னல்களை திறந்து வைப்பதால் லட்சுமி தேவி வீட்டிற்குள் வந்து செல்வத்தை அள்ளி தருவாள்.

அப்படி லட்சுமிதேவி நம் வீட்டிற்குள் வருவதற்கு நம் வீட்டில் செல்வம் அதிகரிப்பதற்கு நாம் ஒரு சில வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். எனவே லட்சுமி தேவியை வீட்டுக்குள் கொண்டு வருவதற்கு வீட்டில் உள்ள கதவு ஜன்னல்களை எந்த நேரத்தில் திறந்து வைக்க வேண்டும் என்பதை பற்றியும் ஒரு சில வாஸ்து குறிப்புகளை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவழைக்க பின்பற்ற வேண்டிய சில வாஸ்து குறிப்புகள்
லட்சுமி தேவி வீட்டுக்குள் வருவது வீட்டிற்கு மங்களம் சேர்ப்பதாக கருதப்படுகிறது அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி என்று மாலை நேரத்தில் லட்சுமிதேவி வீட்டிற்குள் வருவார்கள் எனவே அந்த நேரத்தில் வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வைப்பது மிகவும் நல்லது.
தினமும் காலையில் சூரியன் உதயமாகும் போது பிரம்ம முகூர்த்த நேரத்தில் லட்சுமிதேவி வீட்டிற்குள் வருவாள் எனவே அந்த நேரத்தில் வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் மாலை சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் லட்சுமி தேவி வீட்டுக்குள் வருவாள் எனவே அந்த நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி லட்சுமி தேவியை வரவேற்பதற்காக வீட்டின் கதவு ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அழிந்து நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.
வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்து வீட்டில் துளசி செடி இருந்தால் அதற்கு அருகில் காலை மாலை என இரு வேலைகளிலும் விளக்கு ஏற்றி வீட்டை பிரகாசமாக வைத்திருந்தாலும் வீட்டிற்கு லட்சுமி தேவி வருவாள்.
இதனையும் படியுங்கள் : கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்





