Home ஆன்மிகம் இந்த முருகர் கோவிலுக்குள் மட்டும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது ஏன் தெரியுமா ?

இந்த முருகர் கோவிலுக்குள் மட்டும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது ஏன் தெரியுமா ?

பெண்களுக்கான அனுமதி இல்லாத கோவில்கள் இவர்களில் முதலிடம் பிடிப்பது ஐயப்ப சுவாமி கோவில். ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பெண்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் வயது முதிர்ந்த பெண்கள் வரலாம் என்று விதிவிலக்கு உள்ளது. ஆனால் இங்கு ஒரு முருகன் கோவிலில் பெண்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. அதுவும் கொடிக்கம்பத்தின் அருகில் நின்று மட்டுமே பெண்கள் பார்க்கலாமாம். கோவிலில் உள்ளே சென்று தரிசனம் செய்ய இயலாதாம். அப்படி அந்த முருகன் கோயில் எங்கு இருக்கிறது. எதற்காக அங்குள்ள முருகனை சன்னதிக்குள் சென்று தரிசனம் செய்ய இயலாது? இதற்கான காரணம் தான் என்ன ? இறைவன் எல்லோருக்கும் ஒன்றுதான் என்று கூறினாலும் சில கோவில்களில் ஏன் இப்படி இருப்பதற்கான காரணங்கள் என்ன? பெண்களை உள்ளே அனுமதிக்காமல் இருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா ? சரி வாருங்கள் ஏன் இந்த முருகர் கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

கோவிலின் தலவரலாறு

பிரம்மச்சாரிய முருகர் வள்ளி தெய்வானையோடு முருக பெருமான் காட்சியளித்தாலும் இந்த தளத்தில் முருகப்பெருமான் திருமணம் ஆகாது சுத்த பிரம்மச்சாரி ஆகவே அருள்பாளிக்கிறார். இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்த ஸ்தலம் உருவாவதற்கான முக்கிய காரணம் ராமர் சீதை தான். ராமர் சீதையை மீட்பதற்காக இலங்கை செல்லும் போது கிடங்கூரில் கௌன மகரிஷி ஆசிரமத்தி வழியாக செல்கிறார். தான் திரும்பி வரும்போது தங்களை ஆசிரமத்தில் சந்திக்கிறேன் என்று கூறி செல்கிறார். பின் ராமர் ராவணனை வதம் செய்த பிறகு ராமர் அயோத்தி திரும்பி வருகிறார். அப்பொழுத கௌன மகரிஷியை பார்க்க வருகிறேன் என்று கூறியது நினைவந்து கௌன மகரிஷியை காண வேண்டும் என்று செல்ல எத்தனிகிறார். அப்பொழுதுதான் பரதன் ராமர் அயோத்தி வரவில்லை என்றால் உயிர்த் துறந்துவிடும் நிலையில் இருப்பதாக தெரிந்து கௌன மகரிஷியை பார்க்காமலேயே அவர் அயோத்தி சென்று விடுகிறார். இதை அறிந்த கௌன மகரிஷி இதற்கு காரணம் சீதாதேவி உடன் இருப்பதால் தான் என்று எண்ணிக் கொள்கிறார். இல்லறத்தில் இருப்பதால்தான் ராமபிரான் தன்னை சந்திக்காமல் சென்று விட்டார் என்று நினைத்துக் கொள்கிறார்.

பிறகு கௌன மகரிஷி முருகப்பெருமானை நோக்கி ராமர் தான் வந்து என்னை காணவில்லை தாங்களாவது எனக்கு அருள் புரிந்த காட்சியை கொடுக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்கிறார். ஆனால் அப்பொழுது கௌன மகரிஷியின் மனதில் ஒரு எண்ணம் உதிக்கிறது. ராமர் ஒரு மனைவியான சீதையுடன் இருந்தே தன்னை காணவரவில்லையே முருகப்பெருமான் வள்ளி தெய்வானை என்று இரு மனைவியுடன் இருக்கும் பொழுது தனக்கு எப்படி அருள்பாலிப்பார் என்று யோசிக்கிறார். ஆகையால் முருகப்பெருமானிடம் தாம் வள்ளி தெய்வானை விட்டு பிரம்மச்சரியராக எனக்கு தரிசனம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அதற்கு முருகப்பெருமானம் சம்மதம் தெரிவித்ததால் அங்கு முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார் ஆகையால் இந்த கோவிலுக்குள் பெண்களுக்கு வர அனுமதி இல்லை.

கோவிலின் வழிபாட்டு முறைகள்

கிடங்கூரப்பன் என்று அழைக்கப்படும் இந்த சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பெண்கள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது முருகப்பெருமானின் சன்னிதானத்திற்குள் சென்று பெண்கள் வழிபட முடியாது. அவர்கள் கொடி மரத்தின் அருகில் நின்றே முருகப்பெருமானின் தரிசனத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த கோவிலின் முக்கிய வேண்டுதல்களாக இருப்பவை குழந்தை பேறு, திருமண தடை நீங்குதல். குழந்தை பேரு கிடைக்க வேண்டும் என்று இங்கு வேண்டிக்கொண்டு செல்கிறார்கள் குழந்தை பேரு கிடைத்த பிறகு கூடியாட்டம் என்று சொல்லக்கூடிய பிரம்மச்சரிய கூத்தை நிகழ்த்துகிறார்கள். மேலும் இந்த கோவிலில் காவடி எடுத்தல், துலாபாரம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேற்றுதலும் உண்டு. மேலும் திருமணத்தடை நீங்குவதற்காக இந்த பிரம்மச்சரிய முருகனிடம் வேண்டிக்கொண்டு சுயம்வர அர்ச்சனையும் நடைபெறுகிறது. இதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறுகிறது.

கோவில் அமைவிடம் எங்கே உள்ளது?

கிடங்கூரப்பர் முருகர் கோவில் எங்கே உள்ளது? இந்த பிரம்மச்சரிய முருகரை நீங்கள் தரிசிக்க வேண்டும் என்றால் கேரள மாவட்டத்தில் உள்ள கோட்டையம் அருகே உள்ள கிடங்கூர் என்ற ஊரில் அருள் பாலிக்கிறார். இந்த பிரம்மச்சரிய ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகள் நீங்கள் ஆண்களாக இருந்தால் உங்களுக்கு சன்னதிக்குள்ளேயும் பெண்களாக இருந்தால் கொடி மரத்தின் அருகில் நின்றும் முருகப்பெருமானின் தெய்வீக கோலத்தைக் கண்டு மகிழலாம். இறைவனது திருவுருவை காண்பதே உள்ளத்தில் இருக்கும் அனைத்தையும் நிறைத்து விடும் என்பது சான்றோர்களின் வாக்கு அப்படி நீங்கள் கிடங்கூர் சென்று கிடங்கூரப்பனை வழிபட்டு குழந்தை பேறு மற்றும் திருமணத் தடை நீங்க ஆசி பெற்று நலமோடு வாழ்வீர்களாக.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : நடிகர்கள் முதல் அரசியல் பிரமூகர்கள் வரை ரகசியமாய் இந்த கோவில் சென்று வழி பட காரணம் என்ன?