பல முன்னணி நடிகர்கள், அரசியல் பிரமூகர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் எனபலர் இரகசியமாக தேடி வரும் ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவில். அப்படி அவர்கள் ரகசியமாக தேடி வரும் அளவிற்கு அப்படி என்ன அந்த கோவிலில் சிறப்பு இருக்க என்று பாக்கலாம் வாங்க. இந்த கோவிலில் கருங்காலி, செங்கருங்காலி மாலைகள்உள்ளது. உலகிலேயே முதன் முதலில் கருங்காலியை அறிமுகம் செய்தது இங்குதான், அதன் பிறகுதான் இதன் பயன் மக்களும் தெரியவந்தது அன்று சொல்கிறார்கள் அங்கு வரும் பக்தர்கள். கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். கருங்காலி மாலை களை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும். பஞ்ச பூதங்களின் துணை கிடைக்கும். எதிர்மறை சக்திகள் விலகும். குழந்தை பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் சொத்துகள் சேரும். கல்வி ஞானம் அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மன இறுக்கம் விலகி உள்ளுணர்வு மேம்பாடு அடையும். ரத்த அழுத்தம் சீராகும் என்று நம்பப்படுகிறது. இதேபோல் பூஜை செய்யப்பட்ட நெல்லிக்காய் பக்தர்களுக்கு வழங் கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் திருநீறு
கோவில் ஆதினம் கொடுக்கும் திருநீறு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. 18 வகையான மூலிகைகளைக்கொண்டு இந்த திருநீறு தயாரிக்கப்படுகிறது. இந்த திருநீறு அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மட்டுமே கொடுக்கப்படுகிறது. திருநீறு தயாரிப்பதற்கு யானை சாணம், காரா பசுமாட்டு சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலர்த்தி பொடியாக்கப்பட்ட சாணம், மூலிகைகள், பூக்கள் ஆகியவற்றை அளவீடு செய்ய, வெண்கலத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதன்பிறகு அவை அனைத்தும் சாம்பல் ஆக்கப்பட்டு, மருத்துவம் மற்றும் நறுமணம் மிகுந்த திருநீறாக தயாராகிறது. ஒருமுறை திருநீறு தயாரிக்க 7 மாதங்கள் வரை ஆகிறது.
நேரடியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். ஏனெனில் இறைவனை வழிபடும் பக்தர், தன்னுடைய நெற்றியில் பூசிக்கொள்ளும் வகையில் ஒரு சிட்டிகை அளவுக்குதான் விபூதி வழங்கப்படும். அதனால் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வாய்ப்பில்லை.
எதற்காக இந்த கோவிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள்
650 வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட செம்பு முருகன் சிலை, 16 அடி ஆழத்தில் உள்ளது. சிலர் இதை இரண்டாவது திருச்செந்தூர் என்றுஅழைக்கின்றனர், காரணம் அனைத்து முருகன் கோவிலும் மலை மேல் தான் இருக்கும் ஏறி இறங்க வேண்டும், ஆனால் இவ்விரண்டு இடத்திலும் இறங்கி பின்பு மேலே ஏறுவது போல் உள்ளது. கீழே இருப்பவர்களோ முருகன் வாழ்க்கையில் முருகன் தூக்கி உயரத்தில்விடுவதாக அர்த்தம் என்கிறார்கள்
ஸ்ரீ பாதாள செம்பு முருகன் கோவில் தமிழகத்தில் தற்போது உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று இந்த கோவிலுக்கு ராதாரவி, தேவா, மீனா, தேவயானி போன்ற தமிழ் திரையுலக முன்னணி நடிகர்கள் முதல் மூத்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளும் என அனைவரும் படையெடுத்து வரும் கோவில் என்றால் இந்த பாதாள செம்பு முருகன் கோவில் தான். பல வருடங்களாக திண்டுக்கல்லில் இருந்த இந்த சாதாரணமான கோவிலுக்கு தமிழ்நாட்டில் அல்ல இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவதற்கு காரணம் என்ன ? ஏன் நம்மை விட வெளிநாட்டு இந்தியர்கள் கூட இந்த கோவிலின் மகிமை அறிந்து இங்கு வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்! அப்படி இந்த பாதாள செம்பு முருகன் கோவிலில் என்ன இருக்கிறது என்பதை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம்.
போகரின் சித்தரின் அடுத்த பிறவி
இந்த புகழ் வாய்ந்த பாதாள செம்பு முருகன் கோவில் திண்டுக்கல்லில், ராமாவரம் பகுதியில் உள்ள போகர் நகரில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவில் அமைந்துள்ள போகர் நகரின் பெயர் காரணம் என்ன வென்று பார்த்தால் இந்த பெயருக்கு பின்னாடி தான் இந்த கோவில் உருவான கதையும் இருக்கிறது. நாம் இன்றளவும் வியந்து கேட்கப்படும் கதைகளின் நவபாஷாண சிலையும் ஒன்று இதை உருவாக்கியவர் போகர் எனப்படும் தமிழ் சித்தர். இவரின் அடுத்த பிறவியாக சொல்லப்படுபவர் தான் திருக்கடையூர் சித்தர். இவர் பஞ்சலோகங்களை வைத்து முருகன் சிலையை செய்து பாதாளத்தில் வைத்து வழிபட்டு வந்தார். இப்படி இந்த திருக்கடையூர் சித்தரின் வம்சா வழியாக வந்த சித்தர்களின் வாரிசுகள் தான் இந்த கோவிலை மேம்படுத்தி இன்று இந்த பாதாற செம்பு முருகன் கோவில் இந்த அளவு வளர்ந்து இருக்கிறது. அன்று திருக்கடையூர் சித்தர் செய்த பஞ்சலோக 650 வருட பழைய முருகன் சிலையை நீங்கள் இந்த கோவிலில் பார்க்க முடியும்.
சரி இந்த கோவிலில் சிறப்புகள் வேறு என்ன என்பதை பார்த்து விடலாம் இந்த கோவிலுக்குள் நீங்கள் நுழையும் போதே 12 அடி உயரத்தில் சங்கிலி கருப்பன் சுவாமி சிலை இருக்கும். உலகத்திலேயே முருகன் கோவிலில் சங்கிலி கருப்பன் சிலை இருப்பது இங்கு மட்டும்தான். இந்த சங்கிலி கருப்பனை நாம் பூஜை செய்து முடிந்து வந்தால் கோவிலின் முன்பாக ஜலகண்டேஸ்வர் நமக்கு காட்சி தருகிறார் ஜலகண்டேஸ்வரர் என்பவர் தண்ணீரிலேயே நமக்கு காட்சி தரக் கூடியவர் அதற்காகத்தான் இவரை ஜலகண்டேஸ்வரர் என்று நான் அழைக்கிறோம். இவரை தாண்டி நாம் அப்படியே கோவிலுக்குள் செல்லும்போது காலபைரவரையும் காணலாம் கால பைரவரின் தாண்டி 16 அடி ஆழத்தில் உள்ள முருகனை காண 18 படி கொண்ட குகையில இறங்கி சென்றால் இங்கு நாம் முழுக்க முழுக்க செம்பினால் செய்யப்பட்ட பாதாள செம்பு முருகர் காட்சி அளிப்பார். அவரின் அருகிலேயே 650 வருடம் பழைய திருக்கடையூர் சித்தர் உருவாக்கிய சிறிய முருகன் சிலை இருக்கும்.

9 வாரங்கள் தொடர்ந்து வந்தால் நினைத்து நடக்கும்
பொதுவாக முருகனை மலை மேல் இருக்கும் குமரன், குன்றத்தின் மேல் இருக்கும் குமரன் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு பாதாளத்தில் முருகன் இருக்கிறார் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக திகழக்கூடியது இந்த பாதாள செம்பு முருகன் கோவில் தான். பொதுவாக நம் முருகன் குடி கொண்டிருக்கும் பெரும்பாலான மலைக் கோவில்களுக்கு செல்லும்போது ஏற்றமாகவும் திரும்பி வரும்போது இறக்கமான பாதையாக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நாம் முருகனை இறங்கி சென்று தரிசித்து விட்டு ஒரு ஏற்றமான பாதையில் வருவது சிறப்பானது அது நம் வாழ்க்கைக்கும் ஒரு ஏற்றத்தை கொடுக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து வந்தால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் எல்லாம் கைகூடி வரும் என இங்கு வந்து பயன் அடைந்த பலர் கூறுகிறார்கள். இந்த கோவிலில் நவகிரகங்களால் நமக்கு உண்டாகக்கூடிய தோஷங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் இந்த பாதாள செம்பு முருகன் போக்கி விடுவார்.
செவ்வாய்க்குரிய தெய்வமாக முருகன் திகழுகிறார் அதனால் அரசு வேலையில், காவல்துறை சம்பந்தமான வேலைகள், ராணுவம் சம்பந்தமான வேலைகளில் பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டி இங்கு வந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய பலனும் உடனே கிடைக்கிறது என்பதால் பல அதிகாரிகள் இந்த கோவிலுக்கு படை எடுத்து வருகின்றனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாக சொல்லப்படுவது கருங்காலி, செங்கருங்காலி மாலைகள் சொல்லபடுகின்றனர். இந்த கோவிலில் தரப்படும் கருங்காலி மாலையை உங்கள் கழுத்தில் அல்லது உங்கள் கைகளில் எப்போதும் அணிந்தவாறு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே வந்து சேரும் என்கிறார்கள். இதற்கு உதாரணமாக தமிழ் நடிகர்கள் தனுஷ், சூரி போன்றவர்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக குவிப்பதற்கு காரணம் இவர்களை இரண்டு பேரும் கருங்காலி மாலை அணிந்து இருப்பதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள். நடிகர் தனுஷ் கூட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவருடைய கழுத்தில் இந்த கருங்காலி மாலையை நாம் காணலாம். அப்படி இந்த கருங்காலி மாலையில் என்ன சக்தி இருக்கிறது என்று பார்த்தால் இந்த கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மாலையை நாம் அணிந்திருக்கும் போது எப்படி பட்ட கெட்ட சக்திகள் ஆக இருந்தாலும் நம்மை நெருங்க முடியாது இந்த சக்திகளை எல்லாத்தையும் நல்லர் சக்திகளாக மாற்றக்கூடிய சக்தி இந்த கருங்காலி மரத்திற்கும் உண்டு. இதை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்களுடன் கூடிய மனிதர்கள் உங்களிடம் வந்தால் கூட அந்த கெட்ட எண்ணங்களை தவிர்த்து விட்டு உங்களிடம் நல்லபடியாக பேசுவார்கள் என்று இந்த மாலையை அணிந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த மரம் தான் இந்த கருங்காலி. இந்த கருங்காலி மாலையை முதில் இந்த பாதாள செம்பு முருகன் கோவிலில் தான் அறிமுக படுத்தினார்கள்.இங்கு கொடுக்கப்படும் மாலை மிகவும் பிரபலமானது.
இரண்டாவது திருச்செந்தூர்
இந்த கோவில் திருநீரை ஏழு வாரங்கள் பூஜை செய்து அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் விசேஷ பூஜை செய்து மூலிகை பொருள்களை கலந்து செய்யப்படும் திருநீரூ இதை முருகனின் காலடியில் வைத்து அது அதனுடைய சக்திகளை இன்னும் கூட்டி நமக்கு தருவார்கள். இந்த திருநீரை நாம் பூசிக்கொள்ளும்போது நமது உடம்பில் பல மாற்றங்கள் நிகழ்வதை நம்மால் உணர முடியும் என்று இந்த கோவிலுக்கு வந்து திருநீர் வாங்கிய பயன் பெற்றவர்கள் பலர் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த திருநீர் இந்த கோவிலில் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் 16 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாதாள செம்பு முருகனை நீங்கள் தரிசிக்க உள்ளே போகும் போதே உங்கள் உடம்பில் ஒரு விதமான நேர்மறை ஆற்றல் வருவதை உங்களால் உணர முடியும். அதனால் தான் பக்தர்கள் இதை இரண்டாவது திருச்செந்தூர் அன்று அழைக்கிறார்கள்.


