புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

- Advertisement -

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம் பெருகி பங்குச்சந்தையும் உயரும் என்று சொல்வார்கள். அந்த வகையில் புதன் மே 31ஆம் தேதி ரிஷப ராசிக்குள் நுழையப் போகிறார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது அந்த ராஜயோக பெற போகும் சில ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ரிஷப ராசி

புதன் ரிஷப ராசிக்குள் நுழைய போவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பல விதமான நல்ல செய்திகள் வந்து சேரும். யாருடனாவது கூடி கூட்டு தொழில் செய்து வந்தால் அதில் நீங்கள் எதிர்பாராத வகையாக நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் அழகாக மாறி மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

- Advertisement -

மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு 12 வது இடத்தில் புதன் இருப்பதால் வீட்டில் உள்ள பொருளாதார நிலை மாறி நல்ல நிலைக்கு செல்வீர்கள். நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளும் முடிந்து அதன் மூலம் பல நன்மைகள் உண்டாகும். புது வருமானத்திற்காக நீங்கள் புதிய வேலைக்கு முயற்சி செய்தால் அது கூடிய விரைவில் நடக்கும்.

கடக ராசி

புதனின் இந்த மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியான சூழலும் ஏற்படும். நீங்கள் எந்த வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் புதனின் இந்த மாற்றத்தால் அந்த வேலையில் உங்களுக்கு முன்னேற்றமே கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

-விளம்பரம்-