நவகிரகங்களில் சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தான். காரணம் சனிபகவான் கொடுக்கும் சங்கடங்கள் அப்படிப்பட்டது. நல்லவர்களுக்கு அவரே அள்ளியும் கொடுப்பார். அவர் நீதிமான் என்பதால் ஆணவக்காரர்களின் தலையில் தட்டி அமர வைத்து விடுவார். எனவேதான் நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் எதை நினைத்தும் பயப்பட தேவையில்லை. தசாபுத்திகளும் சரியாக இருந்தால் கிரகங்களின் கோச்சார ரீதியான சஞ்சாரமும் யாரையும் பாதிக்காது. வேத சாஸ்திரங்களின் படி, நவ கிரகங்களுள் சனி பகவான் மிக மெதுவாக நகரும் கிரகமாக கூறப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறார். அடுத்த வருடம் மார்ச் 2025-ல் சனி கும்பம் ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசிக்கிறார். அதன்பிறகு 2025 மார்ச் 29-ம் தேதி மீன ராசியில் பிரவேசிக்கிறார். சனி 2027 ஜூன் 3-ம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். 2025 முதல் 2027 வரை எந்தெந்த ராசிக்காரர்கள் சிறப்பாக இருக்கப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மீனம்

சனியின் பிரவேசம் மீனம் ராசியினரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடனான உறவின் பலனாக நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். இனி 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சங்கடங்கள் தீரும் காலம் வந்து விட்டது. இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். புதிய வேலை கிடைக்கும் வருமானம் பெருகும். பிரிந்து போன குடும்ப உறவுகள் ஒன்று சேர்வார்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களுக்கு அதிகரிக்கும். இதன் மூலம் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த முடியும்.
விருச்சிகம்

சனியின் இந்த இடப்பெயர்வு காலம் விருச்சிக ராசியினரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொழிலில் முன்பை விட நல்ல நேரம் வரும். விருச்சிக ராசியினர் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தினை அடைவார்கள். கடன் கொடுத்து விட்டு ஏமாந்தவர்களுக்கு பணம் வீடு தேடி வரும் சனியால் ஏற்பட்ட விடுதலையை சந்தோஷமாக அனுபவியுங்கள். வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். விசா கிடைக்கும். தொழில் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களும் நன்மைகளைப் பெறுவார்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களும் நிறைய நன்மைகளைப் பெறலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கை முன்னெப்போதையும் விட சிறப்பாக இருக்கும். சனியின் ஆசீர்வாதத்தால், எதிர்பார்ப்பதை விட அதிகமான பண வரவு இருக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் தொடங்குவீர்கள். அதே நேரத்தில் அதிக கடன் வாங்கி பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்காதீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : சனிப் பெயர்ச்சியால் 2025ல் அதிக நன்மைகளை அள்ளப் போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!



