- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
காலை எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சத்தான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவல் உள்ளதா? அந்த அவலை என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் அதைக் கொண்டு தக்காளி அவல் செய்யுங்கள். இந்த அவல் ரெசிபி வழக்கமாக செய்யும் ரெசிபியைப் போல் இல்லாமல், சுவையாகவும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
பொதுவாக அவல் எளிதில் செரிமானமாகும் மற்றும் பலவகையான உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நமது வீடுகளில் அவல் வைத்து சுவையான சிற்றுண்டி உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் நாம் அவலை வைத்து காலை உணவிற்கு எப்படி தக்காளி அவல் செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம். இது சாப்பிடுவதற்கு உப்புமா போலவே இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
இந்த ரெசிபியை வீட்டில் காலை வேளையில் செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி செய்றதுக்கு குறைவான நேரம் மட்டுமே தேவைப்படும். காலைல ப்ரேக் பாஸ்ட்க்கு குழந்தைகளுக்கு டக்குனு செஞ்சு கொடுத்து விடலாம் அல்லது குழந்தைகள் ஈவினிங் வீட்டுக்கு வரும் போது ஏதாவது சாப்பிடணும் போல இருக்குது பசிக்குதுன்னு கேட்டாங்கன்னா இதை செஞ்சு கொடுத்தீங்கன்னா அவர்களுக்கு வயிறு நிறைந்திடும்.
இந்த ரெசிபியை செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். முக்கியமா குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். காலை உணவு ஆரோக்கியமாக இருந்தால் தான் அன்றை நாள் சுருசுருப்பாக அமையும். அதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும் உதவுகிறது. எனவே காலை உணவை ஹெல்தியாக்க தக்காளி அவல் ரெசிபியை டிரை பண்ணி பாருங்கள். இப்போது சுவையான தக்காளி அவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வீட்ல அவல் இருந்தா இந்த அவல் கேசரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
முதலில் அவலை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் வேர்க்கடலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி அவல் சேர்த்து வதக்கவும்.
பின் இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி அவல் தயார்.






