- Advertisement -
Home சட்னி இது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் வைத்து சுவையான ஒரு சட்னி செய்து பாருங்கள் அசத்தலாக...

இது மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் வைத்து சுவையான ஒரு சட்னி செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

- Advertisement -

தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்.

கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். மாங்காய் சீசன் என்பதால் மாங்காய் விலை குறைவில் கிடைக்கும். பொதுவாக மாங்காய் வைத்து சாம்பார், பச்சடி, ஊறுகாய், மாங்காய் சாதம் போன்றவற்றை அதிக அளவில் செய்து இருப்போம். ஆனால் மாங்காய் வைத்து சுவையான சட்னியை செய்ததுண்டா?

- Advertisement -

இல்லையென்றால் உடனே செய்து பாருங்கள் இது நாம் வழக்கமாக செய்யும் சட்னிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். இப்படி மாங்காய் கொண்டு செய்யப்படும் சட்னியானது‌ காரம், புளிப்பு என்ற பல சுவைகள் கலந்து, அருமையாக இருக்கும். இந்த சட்னியை வெள்ளை சாதத்துடன், நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த மாங்காய் மிளகாய் சட்னி செய்வது மிகவும் சுலபம். இப்போது சுவையான மாங்காய் சட்னியை வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

மாங்காய் சட்னி | Raw Mango Chutney Recipe In Tamil

தென்னிந்திய சமையலில் காலை, இரவு என இரு வேளைகளிலும் நிச்சயம் இட்லி, தோசை, சப்பாத்தி என ஏதாவது டிபன் இடம் பெறும். வழக்கமாக இட்லி, தோசை போன்றவற்றிக்கு நாம் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, பூண்டு சட்னி போன்றவற்றை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஏதேனும் புதுமையாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். கோடை காலத்தில் மாங்காய் அதிகளவில் கிடைக்கும். அத்தகைய மாங்காயைக் கொண்டு பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். அந்தவகையில் இப்பொழுது மாங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்பதை தான் பார்க்கப்போகிறோம். இப்படி மாங்காய் கொண்டு செய்யப்படும் சட்னியானது‌ காரம், புளிப்பு என்ற பல சுவைகள் கலந்து, அருமையாக இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Raw Mango Chutney
Yield: 5 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 மாங்காய்
  • 10 காஷ்மீர் மிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 7 பல் பூண்டு                          
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • முதலில் மிளகாயை சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும். மாங்காயை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் மாங்காய், ஊற வைத்த மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.‌
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மாங்காய் சட்னி தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 99kcal | Carbohydrates: 5.2g | Protein: 26g | Fat: 4.1g | Sodium: 63mg | Potassium: 102mg | Fiber: 19g | Vitamin A: 60IU | Vitamin C: 184mg | Calcium: 31mg | Iron: 27mg

இதனையும் படியுங்கள் : இந்த மாங்காய் சீசன்லயே ஒரு தடவை மாங்காய் ரசம் இந்த மாதிரி வச்சு பாருங்க!!