மாங்காய் வைத்து மாங்காய் ஊறுகாய், மாங்காய் வத்தல், வடு மாங்காய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சிருப்பீங்க. கோடைகாலம் அப்படின்னு வந்துட்டாலே வெயிலோடு சேர்த்து மாங்காய் சீசனும் வந்துடும். என்னதான் வெயில்ல மாங்காய் சாப்பிடுறது உடம்புக்கு சூடு அப்படினாலும் நம்ம அந்த மாங்காய் சாப்பிடாம இருக்கவே மாட்டோம். அந்த வகையில மாங்காய் வச்சு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடுவோம். இன்னைக்கு நம்ம மாங்காய் வச்சு கொஞ்சம் வித்தியாசமா ரசம் வைக்க போறோம். இந்த ரசத்துக்கு புளி தக்காளி அப்படின்னு எதுவுமே தேவைப்படாது.
டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும் ஒரே ஒரு மாங்கா இருந்தா போதும் அந்த மாங்காய் வச்சு இந்த சுவையான ரசம் ஒரு தடவை செஞ்சு பாருங்க. அவ்ளோ டேஸ்டா இருக்கும் சுட சுட சாதத்துல ஊத்தி பிசைந்து சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்ட்டாவே இருக்கும். டேஸ்டான இந்த மாங்காய் ரசத்துக்கு வீட்ல இருக்குற எல்லாரும் அடிக்ட் ஆகிடுவாங்க. தக்காளி ரசம் புளி ரசம், மிளகு ரசம் அப்படின்னு விதவிதமா ரசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாங்காய் சீசன்லையே இந்த மாதிரி ஒரு தடவை மாங்காய் ரசம் வச்சு சாப்பிட்டு பாருங்க.
இந்த மாங்காய் ரசம் சாப்பிடறதுக்கு கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். இந்த ரசத்துல நம்ம துவரம் பருப்பும் சேர்க்கிறதால ரசத்தோட டேஸ்ட் அவ்ளோ அருமையா இருக்கும். இந்த ரசத்தை கொதிக்க விடக்கூடாது முறை கட்டும் போதே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடணும். இந்த டேஸ்டான மாங்காய் ரசத்தை கண்டிப்பா வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இதை செஞ்சு கொடுங்க வீட்ல புளி தக்காளி எதுவுமே இல்லனா கூட ஒரு மாங்காய் இருந்தா போதும் சூப்பரான ரசம் வச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான மாங்காய் ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாங்காய் ரசம் | Mangai Rasam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 மாங்காய்
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- 3 காய்ந்த மிளகாய்
- 1/4 கப் துவரம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 5 பல் பூண்டு
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு குக்கரில் மாங்காயை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் மஞ்சள் தூள் ஊற வைத்த துவரம் பருப்பு, சிறியதாக நறுக்கிய இஞ்சி சேர்த்து ஐந்து விசில் விட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை தட்டிய பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் மிளகுத்தூள் சீரகத்தூள் மாங்காய் கலவை உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மாங்காய் ரசம் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் மாங்காய் ஊறுகாய் இப்படி செய்து பாருங்கள்! இந்த வருடம் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய ரெசிபியாம்!