- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- Lunch
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா, முருங்கைக்கீரை சேர்த்து தொக்கு பதத்திற்கு நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து வதக்கவும்.
பின் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து குக்கரை மூடி நான்கு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்கீரை பன்னீர் புலாவ் தயார்.





