Home ஸ்நாக்ஸ் மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்...

மாலை வேளையில் ருசித்து சாப்பிட ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் ப்ரோக்கோலி வைத்து சீஸ் பால்ஸ் செய்து கொடுங்கள். பொதுவாக குழந்தைகள் மட்டுமல்லாமல் ஒரு சில பெரியவர்களையும் காய்கறிகள் சாப்பிட வைப்பது சற்று சவாலாகவே இருக்கும்.

குறிப்பாக ப்ரோக்கோலி போன்ற ஒரு சில காய்கறிகளை குழந்தைகள் விரும்புவதில்லை. இந்நிலையில் ப்ரோக்கோலி குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். அடிக்கடி ஸ்நாக்ஸ் கேட்கும் குழந்தைகளை சமாளிப்பது சற்று கடினம் தான். ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் வகைகளை தவிர்த்து, பழங்கள், சுண்டல் மற்றும் இது போன்ற காய்கறி வைத்து சீஸ் பால்ஸ் சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. அதே சமயம் இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. வெளிப்புறத்தில் நன்றாக மொறு, மொறு வென்று இருக்கும். உள்புறத்தில் சீஸின் சுவையுடன் சீஸியாகவும், ப்ரோக்கோலியுடன் சேர்ந்து ஒரு சிறந்த சுவையை உங்களுக்கு வழங்கும்.

உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது அவர்களுக்கும் இந்த ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் செய்து கொடுங்கள். சுடசுட சீஸ் சுவையுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இதற்கு உங்கள் விருப்பத்திற்கு எது வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம். இப்போது சுவையான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் | Broccoli Cheese Balls Recipe In Tamil

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் ஏதாவது சாப்பிட வேண்டுமென கேட்கிறார்களா? அவர்களுக்கு ஆரோக்கியமான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் புரோட்டீன் அதிகம் ப்ரோக்கோலி வைத்து சீஸ் பால்ஸ் செய்து கொடுங்கள். பொதுவாக குழந்தைகள் மட்டுமல்லாமல் ஒரு சில பெரியவர்களையும் காய்கறிகள் சாப்பிட வைப்பது சற்று சவாலாகவே இருக்கும். குறிப்பாக ப்ரோக்கோலி போன்ற ஒரு சில காய்கறிகளை குழந்தைகள் விரும்புவதில்லை. இந்நிலையில் ப்ரோக்கோலி குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம். அடிக்கடி ஸ்நாக்ஸ் கேட்கும் குழந்தைகளை சமாளிப்பது சற்று கடினம் தான். ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் வகைகளை தவிர்த்து, பழங்கள், சுண்டல் மற்றும் இது போன்ற காய்கறி வைத்து சீஸ் பால்ஸ் சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian, TAMIL
Keyword: Broccoli Cheese Balls
Yield: 5 People
Calories: 131kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 ப்ரோக்கோலி
  • 3 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 2 வேகவைத்த உருளைக்கிழங்கு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் ஆரிகானோ
  • 1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  • 1 டீஸ்பூன் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்
  • 1/2 டீஸ்பூன் கார்லிக் பவுடர்
  • பிரெட் தூள் தேவையான அளவு
  • சீஸ் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ப்ரோக்கோலியை ஐந்து நிமிடங்கள் வேக வைத்து பின் துருவி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் துருவிய ப்ரோக்கோலி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, ஆரிகானோ, சில்லி பிளேக்ஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், கார்லிக் பவுடர், பிரெட் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் சிறிதளவு எடுத்து அதன் நடுவில் சீஸ் வைத்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • பின் இந்த உருண்டைகளை சோள மாவு கலவையில் பிரட்டி பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ப்ரோக்கோலி சீஸ் பால்ஸ் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 131kcal | Carbohydrates: 4.5g | Protein: 25g | Fat: 6g | Sodium: 67mg | Potassium: 106mg | Fiber: 15g | Vitamin A: 93IU | Vitamin C: 154mg | Calcium: 29mg | Iron: 34mg

இதனையும் படியுங்கள் : சப்பாத்தி பூரிக்கு சைடு டிஷ்ஷா காளான் ப்ரோக்கோலி மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!