- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் இனிப்பான உணவு செய்து கொடுக்க விரும்பினால் இந்த பாஸ்தா கீர் செய்து கொடுங்கள்.
பொதுவாக இந்த பாஸ்தா கீர் முஸ்லிம் வீடுகளில் பக்ரீத் ரம்ஜான் போன்ற பண்டிகைகள்ல அதிகமாவே செய்து சாப்பிடுவார்கள். இந்த கீர் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். குடிக்க குடிக்க இன்னும் குடிச்சுகிட்டே இருக்கணும் போல தோணும். இந்த ரெசிபியை செய்வதும் ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு வேலை தான். பாஸ்தா இருந்தா இனிமேல் இந்த மாதிரி ஒரு தடவை கீர் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்.
இந்த கீர் ஜில்லுனு சாப்பிட்டாலும் நல்லா இருக்கும் சூடாக சாப்பிட்டாலும் நல்லா இருக்கும். ஏதாவது நல்ல பிரியாணி சிக்கன் மட்டன் அப்படின்னு வயிறு ஃபுல்லா சாப்பிட்டுவிட்டு கடைசியா இந்த கீர் குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். ஏதாவது ஸ்வீட் சாப்பிடணும் போல ஆசையா இருந்தால் எப்பவுமே ஒரே மாதிரியாக பாயாசம், கேசரி செய்து சாப்பிடாமல் ஒரு தடவை இந்த மாதிரி சூப்பரான பாஸ்தா கீர் செய்து சாப்பிட்டு பாருங்கள். இப்போது சுவையான பாஸ்தா கீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மஷ்ரூம் ஒயிட் சாஸ் பாஸ்தா
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பாஸ்தா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து வதக்கவும். பின் காய்ச்சிய பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வறுத்த பாஸ்தா மற்றும் பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து 20 நிமிடங்கள் வரை வேக விடவும்.
பாஸ்தா நன்கு வெந்து வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பாஸ்தா கீர் தயார்.






