- Advertisement -
Home சைவம் இரவு உணவிற்கு தொட்டுக்க சட்டுன்னு ஏதாவது செய்ய நினைத்தால் இந்த தக்காளி குருமாவை ஒரு முறை...

இரவு உணவிற்கு தொட்டுக்க சட்டுன்னு ஏதாவது செய்ய நினைத்தால் இந்த தக்காளி குருமாவை ஒரு முறை முயற்சித்து பாருங்கள்!!

- Advertisement -

இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்தால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு தக்காளி குருமா செய்யுங்கள். பொதுவாக சப்பாத்தி அல்லது பூரிக்கு சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு குருமா, சோயா குருமா அப்படின்னு நிறைய குருமா ரெசிபி செய்திருப்பீர்கள்.

அந்த வகையில் வீட்டில் எந்த காய்கறியுமே இல்லை என்றால் இந்த ருசியான தக்காளி குருமா செய்து பாருங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் சாதத்திற்கும் ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த குருமாவை ஒரு முறை செய்து விட்டால் போதும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கணக்கில்லாமல் சாப்பிட்டுகிட்டே இருப்பார்கள் அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த ரெசிபிக்கு நாம் ஒரு மசாலா அரைத்து செய்யப்போறோம்.

- Advertisement -

அந்த மசாலா தான் இந்த ரெசிபிக்கு ரொம்ப ரொம்ப சூப்பரான வாசனையை கொடுக்கக் கூடியது. இதனை சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை ஒரு தடவை செய்து பார்த்து விட்டால் போதும் அதுக்கப்புறம் அடிக்கடி இதை நீங்கள் செய்வீர்கள் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். அதனால் இந்த ருசியான தக்காளி குருமா ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்கள். இப்போது ருசியான இந்த தக்காளி குருமா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

தக்காளி குருமா | Tomato Kurma Recipe In Tamil

இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்தால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு தக்காளி குருமா செய்யுங்கள். பொதுவாக சப்பாத்தி அல்லது பூரிக்கு சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு குருமா, சோயா குருமா அப்படின்னு நிறைய குருமா ரெசிபி செய்திருப்பீர்கள். அந்த வகையில் வீட்டில் எந்த காய்கறியுமே இல்லை என்றால் இந்த ருசியான தக்காளி குருமா செய்து பாருங்கள். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் சாதத்திற்கும் ஒரு பெர்ஃபெக்ட்டான காம்பினேஷன் ஆக இருக்கும். இந்த குருமாவை ஒரு முறை செய்து விட்டால் போதும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கணக்கில்லாமல் சாப்பிட்டுகிட்டே இருப்பார்கள் அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். ‌
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Tomato Kurma
Yield: 5 People
Calories: 61kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 வெங்காயம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பட்டை, கிராம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • புதினா சிறிதளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு

அரைக்க :

  • 1 கப் தேங்காய் துருவல்
  • 3 பச்சை மிளகாய்
  • 6 முந்திரி
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 5 தக்காளி

செய்முறை

  • முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, புதினா, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
  • பின் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை தூவி கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி குருமா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 61kcal | Carbohydrates: 4.8g | Protein: 25g | Fat: 3.1g | Sodium: 81mg | Potassium: 129mg | Fiber: 21g | Vitamin A: 72IU | Vitamin C: 131mg | Calcium: 33mg | Iron: 37mg

இதனையும் படியுங்கள் : கொங்கு நாட்டு தக்காளி கிரேவி