- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவாக பெரும்பாலானோரின் மிகவும் விருப்பமான உணவுப் பொருள் தான் தயிர். இந்த தயிர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தயிர் சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ உணவாளர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்தி பிரியர்களா? இதனால் அடிக்கடி வீட்டில் சப்பாத்தி செய்வீர்களா? பொதுவாக சப்பாத்தி செய்தால், சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாக, பன்னீர் பட்டர் மசாலா, கடாய் பன்னீர், தக்காளி கொத்சு, சட்னி, சாம்பார் என்று தான் செய்வோம்.
ஆனால் இப்படி எத்தனை நாள் தான் ஒரே மாதிரி சமைப்பீர்கள். அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் செய்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். அப்படி என்ன வித்தியாசமான சைடு டிஷ் செய்வது என்று யோசனையாக உள்ளதா? உங்கள் வீட்டில் தயிர் உள்ளதா? அப்படியானால் தயிர் வைத்து சுவையான பச்சை மிளகாய் தயிர் கறி செய்து பாருங்கள். இந்த பச்சை மிளகாய் தயிர் கறி சப்பாத்தி, சாதம், பூரி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்கள் அதுக்கப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு நாக்குல எச்சில் ஊறும். இந்த ரெசிபியை பத்து நிமிஷத்துல சூப்பரா செஞ்சுடலாம். உங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் போது இந்த பச்சை மிளகாய் தயிர் கறியை சட்டுன்னு பத்து நிமிடங்களில் செய்து முடித்திடலாம். இப்போது சுவையான பச்சை மிளகாய் தயிர் கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு இனி சட்னி சாம்பார் என்று செய்யாமல் சுவையான இந்த பச்சை மிளகாய் பொடி செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
பின் தயிரை சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பச்சை மிளகாய் தயிர் கறி தயார்.






