- Prep
- 5 min
- Cook
- 5 min
- Total
- 10 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
எப்போதும் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரி சட்னி, சாம்பார், குருமா என்று செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சிம்பிளாக, அதே சமயம் சட்டென்று செய்யக்கூடியவாறு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் வேண்டுமா? உங்கள் வீட்டில் 1 கப் பொட்டுக்கடலையும், 4 பச்சை மிளகாயும் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையைக் கொண்ட பொடி ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே பச்சை மிளகாய் என்றால் பெரும்பாலானவர்களுக்கு அதன் காரத்தன்மை தான் நினைவிற்கு வரும்.
அதனால் பலரும் அதன் சத்துக்கள் தெரியாமலேயே அதனை புறக்கணித்து விடுகின்றோம். குழம்பில் சேர்க்கும் பச்சை மிளகாயையும் உணவில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுட்டு சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஆனால் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இது பெரிதும் துணைப்புரிகின்றது. பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக்கொள்ள உதவுகிறது.
இதனால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க பச்சை மிளகாய் உதவுகிறது. மேலும் இது ஒரு இயற்கை வலி நிவாரணியான இருகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட பச்சை மிளகாயை கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு பச்சை மிளகாய் பொடி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த பச்சை மிளகாய் பொடி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான பச்சை மிளகாய் பொடியை ஒரே நாளில் சுலபமாக செய்திடலாம். இந்த பொடி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். ஒரு மாதத்திற்கு ஸ்டோர் பண்ணி வைத்து சாப்பிடலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான பச்சை மிளகாய் பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பச்சை மிளகாய் சிக்கன் ப்ரை இப்படி செய்து பாருங்க ? ஆஹா இதன் சுவையே தனி தான்!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் பொட்டுக்கடலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் சீரகம், வெள்ளை எள், தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் சிறிதளவு எண்ணெய் விட்டு பூண்டு, பச்சை மிளகாய், புளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இவற்றை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பச்சை மிளகாய் பொடி தயார்.






