Home சைவம் உங்கள் வீட்டில் பீட்ரூட் இருந்தால் அதனைக் கொண்டு தேங்காய் பீட்ரூட் சாதம் ஒரு முறை செய்து...

உங்கள் வீட்டில் பீட்ரூட் இருந்தால் அதனைக் கொண்டு தேங்காய் பீட்ரூட் சாதம் ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் தேங்காய் மற்றும் பீட்ரூட் இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தேங்காய் சாதம், பீட்ரூட் சாதம் என்று செய்யாமல் இரண்டும் சேர்த்து தேங்காய் பீட்ரூட் சாதம் செய்யுங்கள். இதுவரை தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம் இதெல்லாம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள் ஆனால் தேங்காய் பீட்ரூட் சாதம் ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பாக அவ்வளோ டேஸ்டாக இருக்கும்.

குழந்தைகளின் மதிய உணவிற்கு இதனை செய்து கொடுத்து விடுங்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள் அந்த அளவுக்கு இந்த தேங்காய் பீட்ரூட் சாதம் செம டேஸ்டாக இருக்கும். இந்த தேங்காய் பீட்ரூட் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் மட்டும் செய்தால் போதும் வேற எதுவுமே பெருசா தேவைப்படாது. வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் இந்த தேங்காய் பீட்ரூட் சாதத்தை செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பொதுவாக வாரம் ஒருமுறை உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக வீட்டில் குழந்தைகள் இருந்தால், தவறாமல் பீட்ரூட்டை அடிக்கடி சமைத்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். அதற்கு பீட்ரூட்டை அதுபோன்று சாதம் செய்து கொடுப்பது தான் சிறந்த வழி. இப்போது சுவையான தேங்காய் பீட்ரூட் சாதம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Print
No ratings yet

தேங்காய் பீட்ரூட் சாதம் | Coconut Beetroot Rice Recipe In Tamil

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் தேங்காய் மற்றும் பீட்ரூட் இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று தேங்காய் சாதம், பீட்ரூட் சாதம் என்று செய்யாமல் இரண்டும் சேர்த்து தேங்காய் பீட்ரூட் சாதம் செய்யுங்கள். இதுவரை தேங்காய் சாதம், தேங்காய் பால் சாதம் இதெல்லாம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள் ஆனால் தேங்காய் பீட்ரூட் சாதம் ஒரு தடவை செய்து பாருங்கள் கண்டிப்பாக அவ்வளோ டேஸ்டாக இருக்கும். குழந்தைகளின் மதிய உணவிற்கு இதனை செய்து கொடுத்து விடுங்கள் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள் அந்த அளவுக்கு இந்த தேங்காய் பீட்ரூட் சாதம் செம டேஸ்டாக இருக்கும். இந்த தேங்காய் பீட்ரூட் சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் மட்டும் செய்தால் போதும் வேற எதுவுமே பெருசா தேவைப்படாது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Coconut Beetroot Rice
Yield: 5 People
Calories: 85kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 2 பீட்ரூட்
  • 1 கப் தேங்காய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு 
  • 4 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 5 முந்திரி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 கப் சாதம்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பீட்ரூட் மற்றும் தேங்காயை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து பொரிந்ததும் நாம் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்கவும்.
  • பின் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பீட்ரூட் சாதம் தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 85kcal | Carbohydrates: 3.8g | Protein: 22g | Fat: 4.1g | Sodium: 71mg | Potassium: 132mg | Fiber: 18g | Vitamin A: 82IU | Vitamin C: 129mg | Calcium: 33mg | Iron: 37mg

இதனையும் படியுங்கள் : பீட்ரூட் பொரியல் செய்யாமல் ஒரு தடவை பீட்ரூட்ல சிப்ஸ் செஞ்சு பாருங்க!!