- Advertisement -
Home சைவம் அப்பளம் வைத்து சட்டுன்னு வட இந்திய ஸ்டைலில் அப்பள சப்ஜி இப்படி ஒரு முறை செய்து...

அப்பளம் வைத்து சட்டுன்னு வட இந்திய ஸ்டைலில் அப்பள சப்ஜி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

- Advertisement -

உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் காய்கறிகள் கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அடுத்தமுறை வட இந்திய ஸ்டைலில் அப்பள சப்ஜி செய்யுங்கள். இந்த அப்பள சப்ஜி மிகவும் டேஸ்டியாக இருக்கும்.

முக்கியமாக இப்படி அப்பள சப்ஜி ரெசிபி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்த அப்பளத்தைக் கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு அப்பள சப்ஜி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

இந்த அப்பள சப்ஜி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். இந்த ருசியான அப்பள சப்ஜியை சில நிமிடங்களில் வீட்டில் ஊள்ள‌ பொருட்களை வைத்தே சுலபமாக செய்திடலாம். இந்த அப்பள சப்ஜி சாப்பிடுவதற்கு வித்தியாசமான சுவையில் ரொம்பவே சூப்பரா இருக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான அப்பள சப்ஜி ‌எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
2 from 1 vote

உங்கள் வீட்டில் சப்பாத்தி அதிகம் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் காய்கறிகள் கொண்டு அடிக்கடி சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் சைடு டிஷ்ஷை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அடுத்தமுறை வட இந்திய ஸ்டைலில் அப்பள சப்ஜி செய்யுங்கள். இந்த அப்பள சப்ஜி மிகவும் டேஸ்டியாக இருக்கும். முக்கியமாக இப்படி அப்பள சப்ஜி ரெசிபி செய்யும் போது வீட்டில் உள்ளோர் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்த அப்பளத்தைக் கொண்டு வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு அப்பள சப்ஜி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: north india
Keyword: Papad Sabji
Yield: 5 People
Calories: 108kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 லி தயிர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 6 அப்பளம்
  • கொத்தமல்லி சிறிதளவு ‌

செய்முறை

  • முதலில் ஒரு பவுளில் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் பூண்டு, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின் நாம் கலந்து வைத்துள்ள தயிரை சேர்த்து நன்கு கலந்து விடவும். அதன்பிறகு அப்பளத்தை உடைத்து சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • அப்பளம் வெந்ததும் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான அப்பள சப்ஜி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 108kcal | Carbohydrates: 3.4g | Protein: 25g | Fat: 4.5g | Sodium: 71mg | Potassium: 123mg | Fiber: 15g | Vitamin A: 46IU | Vitamin C: 122mg | Calcium: 27mg | Iron: 31mg

இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான அப்பள கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!