மறந்தும் கூட இந்த திசையில் மட்டும் விளக்கு ஏற்றாதீர்கள்! மீறி ஏற்றினால் கடன் சுமை அதிகரித்து பல கஷ்டத்தை பார்பீர்கள்!

- Advertisement -

நாம் கோவில்கள் சென்றாலும் ஏன் வீட்டிலேயே பூஜை அறையில் கடவுளை பூஜிக்கும்போது அகல்விளக்கு ஏற்றாமல் அந்த பூஜையை நம்மால் செய்ய இயலாது. அந்த அளவிற்கு கோவில்களில் செய்யும் பூஜை முதல் வீடுகளில் நாம் கொண்டாடும் சிறிய விழாக்கள் வரை கூட அகல் விளக்கு ஏற்றாமல் அந்த பூஜையை நம்மால் சரிவர செய்ய முடியாது. இப்படி நாம் பூஜையின் போது ஏற்றும் அகல் விளக்கில் சுடர் விட்டு எரியும் தீபத்தை முன்பு அமர்ந்து நாம் பிரார்த்தனை செய்யும் போது தான் தெய்வங்கள் அந்த தீபத்தில் வழியாக அமர்ந்து நாம் பிரார்த்தனை கேட்டு அதை நமக்கு நிறைவேற்றியும் கொடுப்பார்கள். ஆனால் இப்படி நாம் வீட்டில் ஏற்றும் தீபம் சரியான திசையை பார்த்து ஏற்றாவிடில் அதிக அளவு கடன் சுமையை கூட சுமக்க நேரிடும். ஆகையால் இதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

விளக்கு ஏற்றும் திசையும் அதன் பலன்களும்

பொதுவாக யார் எங்கு விளக்கு ஏற்றினாலும் எப்பொழுதும் கிழக்கு திசையை பார்த்தவாரே ஏற்றுவார்கள் ஏன் தெரியுமா ? நாம் கிழக்கு திசையை பார்த்தவாறு அகல் விளக்கு ஏற்றும் பொழுது நம்மை தொடர்ந்து வரும் துன்பங்கள் தீர்ந்து நம்மை ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஏன் இந்த சமுதாயத்தில் கூட நமக்கு ஒரு நல்ல மதிப்பை பெயரையும் கூட பெற்று தரும்.

- Advertisement -

அகல் விளக்கு ஏற்றும் பொழுது மேற்கு திசையை பார்த்தவாறு விளக்கு ஏற்றினால் உங்களது சொந்த பந்தங்கள், உறவுகளுக்குள் இருக்கும் ஒற்றுமை பல மடங்காக அதிகரிக்கும் அது மட்டும் இல்லாமல் உங்களை சுற்றி இருக்கும் கடன் பிரச்சினைகள் தீர்ந்து கடன் சுமையிலிருந்து விடுபடலாம்.

வடக்கு திசையை பார்த்தவாறு நாம் விளக்கு ஏற்றும் பொழுது நமது வீட்டில் மங்களகரமான மற்றும் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் நம் வீட்டில் உள்ள செல்வங்கள் பெருகி நம் வீட்டிற்கு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்.

நீங்கள் தெற்கு திசையை நோக்கியவாறு விளக்கு ஏற்றும் பொழுது தேவையில்லாத கடன் பிரச்சனையில் சந்தித்து, சுமக்க முடியாத கடன் தொல்லையை சுமக்க வேண்டி இருக்கும் மேலும் உங்களின் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் அதிகரித்து உங்களுக்கு தேவையில்லாத சங்கடத்தை உண்டாக்கும்.

-விளம்பரம்-

நீங்கள் விளக்கு ஏற்றும் அந்த விளக்கிற்கு திரியாக பஞ்சு திரியை பயன்படுத்தி விளக்கு போட்டு வந்தால் உங்கள் வீட்டில் சுபம் உண்டாகும்.

நீங்கள் அகல் விளக்கு ஏற்றும் பொழுது தாமரை தண்டு திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றினார் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கும் ஜென்ம ஜென்மமாய் உங்களை தொடரும் பாவங்கள் கூட உங்களை விட்டு விலகி உங்கள் வீட்டில் செல்வங்கள் பெருகும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்படும் ணெகள் இனி விளக்கு ஏற்றும் பொழுது வாழைத்தண்டு திரியை பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் அது உங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தரும்.

-விளம்பரம்-

வெள்ளருக்கு பட்டை திரியை பயன்படுத்தி நீங்கள் அகல்விளக்கு ஏற்றும்பொழுது உங்களுக்கு வேண்டாதவர்கள், உங்கள் எதிரியாக இருப்பவர்கள் நீங்கள் வாழக்கூடாது என்பதற்காக செய்யும் செய்வினைகள் விலகி உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here