கடன் தீர செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு!!
ஒருவருக்கு ஏற்படக்கூடிய கடன் பிரச்சினைகளும் உடல் உபாதைகளும் அவர்களுடைய மூஞ்சென்ன கர்ம வினைகளை பொருத்தி ஏற்படுகிறது என்பது ஜோதிட ரீதியான ஒரு நம்பிக்கை. நவகிரகங்களால் தான் இந்த கடன் பிரச்சினை உண்டாகிறது என்பது ஒரு நம்பிக்கை. இந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கு நவகிரக வழிபாடு அவசியம். மே
ஒருவருக்கு ஏற்படக்கூடிய கடன் பிரச்சினைகளும் உடல் உபாதைகளும் அவர்களுடைய மூஞ்சென்ன கர்ம வினைகளை பொருத்தி ஏற்படுகிறது என்பது ஜோதிட ரீதியான ஒரு நம்பிக்கை. நவகிரகங்களால் தான் இந்த கடன் பிரச்சினை உண்டாகிறது என்பது ஒரு நம்பிக்கை. இந்த கர்ம வினைகளை தீர்ப்பதற்கு நவகிரக வழிபாடு அவசியம். மேலும் நம்முடைய கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குலதெய்வ வழிபாடு மிகவும் தேவையானது. கர்ம வினைகளையும் கூட குலதெய்வ வழிபாடு தீர்த்துவிடும். அந்த வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
குலதெய்வ வழிபாடு
நம்முடைய குலத்தை காக்க கூடிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும் குல தெய்வத்தின் அருளும் முன்னோர்களின் அருளும் இருந்தால் போதுமானது. குலதெய்வத்தினுடைய அருள் இருந்தாலே மற்ற தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைத்துவிடும். குலதெய்வத்தை வழிபடுவதால் நம்முடைய கர்ம வினைகள் தீரும் அப்படி கர்மவினைகள் தீரும்போது கடன் பிரச்சனைகளும் தீரும்.
குலதெய்வ வழிபாடு செய்யும் முறை
இந்த வழிபாட்டை பௌர்ணமி அன்று தான் செய்ய வேண்டும். பௌர்ணமி அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று அங்கே பூஜை செய்ய வேண்டும். குலதெய்வத்திற்கு அசைவ படையில் போடும் வழக்கம் இருந்தால் அதனை செய்யலாம். குல தெய்வத்திற்கு என்னவெல்லாம் சமர்ப்பணம் செய்ய வேண்டுமோ அதனை எல்லாம் சமர்ப்பணம் செய்துவிட்டு பெண் தெய்வங்களாக இருந்தால் அபிஷேகத்திற்கு புடவை வாங்கி சாற்ற வேண்டும். மேலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பூஜை முடிந்த பிறகு பச்சரிசி மாவினால் தயார் செய்த மாவிளக்கை குலதெய்வத்தின் முன்பாக 12 எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும். நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். பிறகு குலதெய்வ சன்னதிக்கு சென்று தங்களுடைய குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
கர்ம வினைகள் தீரும்
பௌர்ணமி அன்று பகல் 11 மணிக்குள் குலதெய்வ வழிபாட்டை செய்து முடித்து 12 தீபங்களை ஏற்று வைத்து வழிபாடு செய்தால் நிச்சயமாக அவர்களுடைய கர்ம வினைகள் படிப்படியாக குறையும் அதன் மூலம் கடன் பிரச்சினைகளும் குறைய தொடங்கும். சக்தி வாய்ந்த குல தெய்வ வழிபாட்டை தினமும் வீட்டில் செய்யலாம். மாதத்திற்கு ஒரு முறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம். கடன் பிரச்சினைகளும் கர்ம வினைகளும் தீரும்.
இதனையும் படியுங்கள் : கடன் பிரச்சினைகள் அதிகமாக சில காரணங்கள்!